Midiyala Hot News

Blogger news

இலங்கை பொருட்கள் மீதான சுங்க வரியை பாகிஸ்தான் தளர்த்தியது

Saturday, May 4, 2013




• தேங்காய் எண்ணெய் (Crude coconut oil) ஏற்றுமதி 100% தள்ளுபடி!
• இலங்கை - பாக்கிஸ்தான் வர்த்தகம் 174% உச்ச நிலை!
• 2012இல் மொத்த வர்த்தகம் அமெரிக்க டொலர் 433,69 மில்லியன்
• 2013 இறுதிக்குள் 11ஆவது கூட்டுப் பொருளாதார ஆணைக்குழு அமர்வுகள்
• செயலாளர் மட்ட கூட்டங்கள் இஸ்லாமாபாத்தில் வெற்றிகரமாக முடிவு


'இலங்கை, பாகிஸ்தான் இருதரப்பு வர்த்தக உறவுகள் மற்றும் ஒத்துழைப்புகள் இவ்வருட இறுதிக்குள் இடம்பெறவுள்ள 11ஆவது கூட்டுப் பொருளாதார ஆணைக்குழு கூட்டத்தொடரில் திருப்தியாக இருக்கும் அத்துடன் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ -  பாகிஸ்தான் அரசாங்கத்திடம் விடுத்த வேண்டுகோளையடுத்து, இலங்கையின் சில ஏற்றுமதி பொருட்கள் மீதான தீர்வைகளை பாகிஸ்தான் தளர்த்தியுள்ளது' என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

அமைச்சர் பசிலை கௌரவித்து இலங்கையின் ஏற்றுமதி பொருட்கள் மீதான வரியை குறைக்க நடவடிக்கை எடுத்த பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு நன்றியை தெரிவிக்கின்றேன். எமது இரு நாடுகளிற்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் கீழ் பல வாய்ப்புகள் இருக்கின்றதை நான் ஒப்புக்கொள்கிறேன். எனினும் அதனை நாம் முழுமையாக பயன்படுத்தப்படவில்லை. இந்த தருணத்தில் அதனையும் ஏற்படுத்த முயலவேண்டும் இதன் அடிப்படையாக இரு நாடுகளிற்கும் இடையில் வர்த்தக ஒப்பந்தம் மேலும் பலப்படுத்தப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
 
விசேட உத்தியோகபூர்வ அழைப்பினை அடுத்து இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் காசிம் குரேஷி, அண்மையில் கொழும்பு 03இல் அமைந்துள்ள கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் வளாகத்தில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை சந்தித்தபோதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

'வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் எமக்கு பல சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. எனினும், நாம் அதனை முழுமையாக பயன்படுத்தவில்லை. தற்போது இதனை பயன்படுத்திக்கொள்வது எமக்கு நல்ல தருணம்.
பலதரப்பட்ட எமது வர்த்தகம் மேலும் விரிவுபடுத்தப்படவேண்டும். எடுத்துக்காட்டாக 4 - 5 வரையிலுள்ள முக்கிய பொருட்கள் மீதான வரி தளர்வை மேலும் கவனத்திற்கொள்ள முடியும். உதாரணமாக பாகிஸ்தானில் பாரிய சீனி தொழிற்சாலைகள் இருக்கின்றன. ஆனால் இலங்கை சீனியினை இங்கிருந்து இறக்குமதி செய்வதில்லை. அத்துடன், வர்த்தக சம்மேளனம் இருதரப்பு வர்த்தகம் நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வதற்கு பல முதலீட்டு ஏற்பாடுகளை செய்கின்றது' என பாகிஸ்தானின் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் காசிம் குரேஷி மேலும் தெரிவித்தார்.

'தற்போது இலங்கையில் 25 முதலீட்டு சபை திட்டங்களில் பாகிஸ்தானிய முதலீட்டாளர்கள் முதலீடுதுள்ளனர். அவை ஆடைகள், இரசாயனங்கள், பெற்ரோலியம், ரப்பர், பிளாஸ்டிக், தோல் பொருட்கள் உற்பத்தி, உணவு, பானங்கள் மற்றும் புகையிலை என்பனவாகும். பாகிஸ்தானூடாக மேற்கொள்ளப்பட்டு ஏற்றுமதி வரி தொடர்பில் இலங்கை பல இடர்களை எதிர்நோக்குகின்றது. ஆனால் நாம் இலங்கைக்கு மூன்று முக்கிய பொருட்களான தேங்காய் எண்ணெய், வெற்றிலை மற்றும் குப்பி போத்தல்கள் குளிரூட்டும் இயந்திரங்கள் மீதான வரி தளர்வினை ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம்' என பாகிஸ்தானின் உயர்ஸ்தானிகர் குரேஷி மேலும் தெரிவித்தார்.

வர்த்தக திணைக்களத்தின் புள்ளிவிபர அடிப்படையில் இலங்கை 5000 - 6000 (மெ.தொ) வெற்றிலையை பாகிஸ்தானுக்கு வருடாந்தம் இறக்குமதி செய்கின்றது. அதனை தொடர்ந்து இலங்கை தாய்லாந்து, இந்தியா, பங்களாதேஷி ஆகிய நாடுகளுக்கு ஏக வழங்குநராக ஈடுபடுகின்றது.

பாகிஸ்தான் வெற்றிலைக்கான தனது இறக்குமதி தீர்வினை 35 வீதமாக குறைத்துள்ளது. 2010ஆம் ஆண்டு அமெரிக்க டொலர் 5.77 மில்லியன் வெகுமதியான வெற்றிலையினை பாகிஸ்தானுக்கு இலங்கை ஏற்றுமதி செய்தது. அத்துடன் தேங்காங் எண்ணெய் வரியினை 50 வீதமாகவும் குறைத்து, அது ஜூலை மாதத்திலிருந்து அமுலுக்கு வருவதற்கான ஏற்பாடுளையும் செய்துள்ளது.

சார்க் பிராந்தியத்தில் இலங்கையின் தயாரிப்புகளை வாங்குபவரகளாக இந்தியாவும் பாகிஸ்தானும் இரண்டாவது இடத்தை வகிக்கின்றன. இலங்கையின் மொத்த ஏற்றுமதியில் 10% சார்க் பிராந்திய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது.

2005ஆம் ஆண்டு வர்த்தக ஒப்பந்தம் அமுலாக்கியதிலிருந்து எமது இரு நாடுகளுக்கான வர்த்தக உறவு பாரிய அனுபவத்துடன் வளர்ச்சியுற்றது. 2005ஆம் ஆண்டு எமது மொத்த வர்த்தகம் அமெரிக்க டொலர் 158 மில்லியனாக அதிகரித்ததுடன், 174 வீத வளர்ச்சியினை காட்டுகின்றது என அமைச்சர் ரிஷாட் சுட்டிக்காட்டினார்.

வர்த்தக சமநிலை எப்போதும் பாக்கிஸ்தானுக்கு ஆதரவாக இருந்து வருகிறது. பாக்கிஸ்தானுக்கு இயற்கை ரப்பர், காய்கறி பொருட்கள், தேங்காய், பிரேசில் கொட்டைகள், தேயிலை, மரம், புண்ணாக்கு, புதிய வாயு டயர்கள் (ரப்பர்), தேங்காய் (கொப்பரை) எண்ணெய் ஆகியன இலங்கையின் முக்கிய ஏற்றுமதி ஆகின்றன.

2013ஆம் ஆண்டு இறுதிப் பகுதியில் நடைபெறவுள்ள 11ஆவது கூட்டுப் பொருளாதார ஆணைக்குழு தொடரில் அமைச்சர் ரிஷாத் மற்றும் பாகிஸ்தானிய உயர் ஆணையாளர் கலந்துகொள்ளவுள்ளனர்.

கூட்டுப் பொருளாதார ஆணைக்குழு தொடர் கூட்டம் கடந்த ஏப்ரல் மாதம் 29 - 30 வரை இஸ்லாமாபாத்தில் இடம்பெற்றது. இதற்கு முதல் 2011ஆம் ஆண்டு  இஸ்லாமாபாத்தில் வெற்றிகரமாக முடிவுற்றது. இவ் கூட்டத்தொடரில் ஏற்றுமதி, இறக்குமதி தொடர்பில் பொருட்கள், சேவைகள், விவசாயம், சுற்றுலா, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், கல்வி மற்றும் விமான சேவைகள், மற்றும் தொழில்நுட்ப உதவி வர்த்தகம் உள்ளிட்டவிடங்கள் கலந்துரையாடப்பட்டது.

No comments:

 

Follow On Facebook

F (Space) Msg1st Sent To 40404

Midiyala Background

Most Reading

Tags

Midiyala Hot News Presentetion. Powered by Blogger.

Blog Archive