Midiyala Hot News

Blogger news

2014 Grade 5 Scholarship Exam Cut Off marks to be reduced?

Sunday, October 26, 2014

According to the 2015 Budget proposals, Education Ministry to be reduced the cut-off marks for students who sat the August 2014 Grade / Year Five Scholarship Examination (Paha Wasara Shishathawa Wibagaya). 163 Pass marks to be reduced 157 marks and for rural districts it Pass Marks will be marks 152. - Lankadeepa
2014 Grade 5 scholarship examination cut-off marks for popular schools will be released in December.

The Education Ministry says the Grade 5 scholarship examinations' cut-off marks for selection of students for popular Schools will be released on the 15th of December. The relevant forms to apply for popular schools have already been sent to the zonal directors of education.
Then the application forms will be given to the relevant principals to be distributed among the parents or guardians of the students. The application forms should be duly filled and handed over to the principals to be directed to the ministry. Accordingly, the students will receive new schools in January.

முஸ்லிம் காங்கிரஸின் ஒரு தரப்பினருக்கு ஜனாதிபதியை சந்திக்க அனுமதியில்லை..!

Wednesday, October 22, 2014

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை சந்திப்பதற்கு முஸ்லிம் காங்கிரஸின் ஒரு தரப்பினர் மேற்கொண்ட முயற்சிக்கு இதுவரை வெற்றி கிடைக்கவில்லையென ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு நம்பகரமான வட்டாரங்களிலிருந்து அறிய வருகிறது.

தலைவர் ரவூப் ஹக்கீமுடன் முரண்பட்டுள்ள ஒரு தரப்பினர் (எம்.பி.க்கள்) இலங்கை முஸ்லிம்களின் தற்போதைய நெருக்கடிகள் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் கலந்துரையாட விரும்பி அதற்காக அனுமதி கோரியுள்ளனர்.

எனினும் இதுவரை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடமிருந்து அதற்கான அனுமதி எதுவும் முஸ்லிம் காங்கிரஸினருக்கு (ஒரு தரப்பினர் -எம்.பி.க்கள்) கிடைக்கவில்லை எனவும், இதனால் அவர்கள் விசனமடைந்திருப்பதாகவும் மேலும் அறியக்கிடைக்கிறது.

தேர்தலில் போட்டியிடுவோம் - ஞானசார

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட போவதாக பொதுபல சேனா அமைப்பு அறிவித்துள்ளது.

பொதுத் தேர்தல் ஊடாக தமது அமைப்பு செயற்பாட்டு ரீதியான அரசியலுக்கு வரவுள்ளதாக பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு கிருளப்பனையில் உள்ள பொதுபல சேனாவின் அலுவலகத்தில் இன்று 21-10-2014 நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

தமது அமைப்பு ஒரு குழுவை தேர்தலில் நிறுத்தி அவர்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கும் எனவும் ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுபல சேனா அமைப்பு வெளிநாட்டில் பணியாற்றும் இலங்கை தொழிலாளர்கள் விடயத்தில் தலையிட உள்ளதாக அறிவித்துள்ளது.

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களின் உரிமைகள் மற்றும் நலன்புரி நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டில் தொழில் புரிவோரின் சங்கம் ஒன்றை ஆரம்பிக்க அந்த கட்சி முடிவு செய்துள்ளது.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பொதுபல சேனா அமைப்பின் பிரதான நிறைவேற்று அதிகாரியான திலந்த விதானகே இதனை கூறியுள்ளார்.

வெளிநாடுகளில் கல்வி கற்று வரும் இலங்கை மாணவர்கள் தொடர்பாக நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

1977 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட திறந்த பொருளாதார முறையுடன் வெளிநாடுகளில் தொழில் புரிவது இலங்கைக்கு பொருளாதார ரீதியாக வருவாயை ஈட்டும் பிரதான முறையாக மாறியது.

ஆசிரியர்கள், பொறியிலாளர்கள், மருத்துவர்கள் என வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்கள், இலங்கையானது சிறந்த தொழில்சார் நிபுணர்கள் உள்ள நாடு என்பதை காட்டியுள்ளனர்.

பாரம்பரிய பெருந்தோட்ட ஏற்றுமதி பொருளாதாரத்தை தோற்கடித்து, வெளிநாடுகளில் பணியாற்றி வரும் இலங்கையர்கள் வருடாந்தம் நாட்டுக்கு 7 மில்லியன் அமெரிக்க டொலர்களை உழைத்து கொடுக்கின்றனர் எனவும் திலாந்த விதானகே மேலும் தெரிவித்துள்ளார்.

அரசில் இருப்பதா என முஸ்லிம் அமைச்சர்களும், எம்.பி.க்களும் தீர்மானிக்க வேண்டியது அவசியம்

Thursday, April 17, 2014



பொதுபல சேனா இயக்கத்திற்கு அரசாங்கமு ஆதரவளிக்கின்றது என ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.

பௌத்த மதத்திற்கு களங்கம் விளைவிக்க சர்வதேச சக்திகள் பொதுபல சேனா இயக்கத்தை பயன்படுத்தி வருவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஆளும் கட்சிக்குள் அங்கம் வகிக்கும் சில தரப்பினர் பொதுபல சேனாவை தூண்டிவிடுவதாகத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு பொதுபல சேனாவை தூண்டி விடுவதன் மூலம் மக்களின் வாழ்க்கைச் செலவு பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை திசை திருப்ப முயற்சிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஆளும் கட்சியின் மிக முக்கியமானவர்கள் பொதுபல சேனாவிற்கு பக்கபலமாக செயற்பட்டு வருகின்றனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொதுபல சேனா மற்றும் ஏனைய கடும்போக்குடைய இயக்கங்கள் உள்நாட்டில் உருவானவை எனவும் சர்வதேச சக்திகளுக்கு தொடர்பில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறுபான்மை மக்களை மூன்றாம் தரப் பிரஜைகளாக நடாத்தும் இந்த அரசாங்கத்தில் தொடர்ந்தும் அங்கம் வகிப்பதா இல்லையா என்பதனை ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் தீர்மானிக்க வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை ஜனாதிபதி , இனியும் மௌனமாக இருப்பாரா...!

Wednesday, April 16, 2014



சர்வதேச ரீதியாக பயங்கரவாத செயற்பாடுகளை ஆய்வு செய்து பயங்கரவாத அமைப்புக்களை பட்டியலிட்டும் அறிக்கையிட்டும் வெளிப்படுத்தும் அமைப்பான 'பயங்கரவாத ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு கூட்டமைப்பு' (TRAC) பொதுபல சோன என்ற பௌத்த அமைப்பினை பயங்கரவாத அமைப்பாக அறிக்கை வெளியிட்டுள்ளது.


ஆனால் இந்த அறிக்கையினை ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் இலங்கை அரசுக்கு இல்லை. ஏனென்றால் நாட்டுக்கு அச்சுறுத்தலாக அமைகின்ற செயற்பாடுகளைச் செய்கின்ற அமைப்புக் களைத்தான் எமது நாட்டு அரசு பயங்கரவாத அமைப்பாக அடையாளம் காணும் அதன்படி அதன் செயற்பாடுகளை தடைசெய்யும்.


இதனடிப்படையில் பொதுபல சேனா என்பது நாட்டுக்கு அச்சுறுத்தலான அமைப்பு அல்ல. அது முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தலான ஒரு அமைப்பாகவே இருக்கிறது. எனவே முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தலானது என்ற காரணத்தை மாத்திரம் வைத்துக்கொண்டு இலங்கை அரசு அதனை பயங்கரவாத அமைப்பாகத் தடை செய்ய முன்வராது.


ஆனாலும் பொதுபல சேனா வேண்டுமென்றே வீணான முறையில் முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கின்ற அடக்குமுறைகளும் அச்சுறுத்தல் செயற்பாடுகளும் காலப்போக்கில் பெருத்த இன மோதல்களை உருவாக்கி இனக்கலவரம் ஏற்படுமாயின் அதனால் ஏற்படும் பேராபத்துக்களும் அழிவுகளும் நாட்டுக்கு அச்சுறுத்தலாக அமையும் என்பதை அரசாங்கம் முன்கூட்டியே சிந்தித்து அதற்கான முன்னேற்பாடுகளை எடுக்க வேண்டும்.


இதன்படி நாட்டைப் பாதுகாக்கும் வகையில் பொதுபல சேனாவின் செயற்பாடுகளை அரசு ஒரு முடிவுக்கு கொண்டுவந்து இந்த நாட்டில் சிறந்த ஜனநாயகம் நிலைநாட்டப்படுவதை அரசு உத்தரவாதப்படுத்த வேண்டும். இதனை நிறவேற்றுவதும் அரசின் பொறுப்பும் கடமையுமாகும்.


பொதுபல சேனாவின் செயற்பாடுகளை பயங்கரவாத நடவடிக்கைகளாக சர்வதேச அமைப்பு ஒன்று அறிவித்துள்ள இத் தருணத்திலும் இது தொடர்பான அரசின் நிலைப்பாட்டை ஜனாதிபதி வெளிப்படுத்தாது மௌனமாக இருப்பது அரசின் மீது முஸ்லிம் சமூகம் கொண்டிருக்கும் சந்தேகங்களை மேலும் வலுப்படுத்துவதாகவே அமைகிறது.


எனவே பொதுபல சேனா அமைப்பு பற்றி ஜனாதிபதி தனது அபிப்பிராயத்தையும் அரசின் நிலைப்பாட்டையும் பகிரங்க அறிப்புச் செய்ய வேண்டும். இது சட்ட ரீதியான அமைப்பா? இதன் நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ளக் கூடியதா? இதனைக் கட்டுப்படுத்தவும் தடைசெய்யவும் முடியாதா? இவ்வாறான அமைப்பு இந்த நாட்டுக்கு அவசியமா? இந்த அமைப்பு எது செய்தாலும் முஸ்லிம்கள் பொறுத்துக் கொள்ள வேண்டுமா? அல்லது அவர்களுக்கு எதிராக போராட வேண்டுமா? இப்படி இது தொடர்பாக ஏதாவது ஒரு உத்தரவை அல்லது அறிவிப்பை ஜனாதிபதி பகிரங்கமாக பொதுமக்களுக்கு விடுக்க வேண்டும்.


ஜனாதிபதி இதுவிடயத்தில் இனியும் மௌனமாக இருப்பது அர்த்தமில்லை. முஸ்லிம் சமூகம் நம்பிக்கை கொள்ளும் வகையில் பொதுபல சேனா பற்றி ஒரு முடிவை அல்லது அது தொடர்பான ஒரு தீhமானத்தை அரசு நிறைவேற்றி, அதன் அர்த்தமற்ற செயற்பாடுகளில் இருந்து முஸ்லிம் மக்களையும் நாட்டையும் காப்பாற்ற வேண்டும்.


இதற்கான ஒரு முடிவினை ஜனாதிபதி எடுக்கும் வகையில் அவருடன் ஒரு வட்ட மேசை உரையாடலை முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆதாரபூர்வமாக ஏற்படுத்த வேண்டும். இச் சந்தர்ப்பத்தில் அரசாங்கத்தில் இருக்கும் முக்கிய சிங்கள சிரேஷ்ட்ட அமைச்சர்களையும், எதிர்கட்சியிலிருக்கும் ஓரிரு முக்கிய பாராளுமன்ற உறுப்பினர்களையும், தமிழ் அரசியல்வாதிகள் சிலரையும் உள்ளடக்கி முறையாகப் பேசி இதனை நீடிக்க விடாது ஜனாதிபதியிடம் ஒரு தீர்வைப் பெற வேண்டும்.


பொதுபல சேனா விடயத்தில் பொலிசாரால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க முடியாதிருக்கின்றது. மத நல்லிணக்கத்தை சீர்குலைப்பவர்களை கட்டுப்படுத்த அதிகாரம் கிடையாது என்று பௌத்த சாசன அமைச்சு பகிரங்கமாக அறிவித்திக்கிறது. ஏனைய தேரர்களோ, சிங்கள அமைச்சர்களோ மாற்றுக் கருத்துச் கூறமுடியாதபடி அராஜகம் மேல் எழுந்து நிற்கிறது. யார் கருத்துக் கூறினாலும் உடனே அவர்களுக்கு மோசமான வார்த்தைகளால் பொதுபல சேனா எதிர்ப்பைக் காட்டிவிடுகிறது. அமைச்சர்களான டிலான் பெரேரா, வாசுதேவ நாணயக்கார போன்றவர்கள் மீது ஞானசாரத் தேரர் குறிப்பிட்டிருக்கும் எதிர்க் குரல்கள் இதற்கு உதாரணமாகும்.


ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, இறுதியில் மனிதனையே கடிக்கும் கதைபோல இன்று ஞானசாரத் தேரர் அரசாங்க அமைச்சர்களான டிலான் பெரேரா, வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச, றிசாட் பதியுத்தீன் மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகிய ஐந்து அமைச்சர்களுக்கும் பகிரங்க விவாத அழைப்பினை விடுத்திருக்கிறது.


ஒரு விவாதத்தில் கலந்துகொள்ள வேண்டுமானால் முக்கியமாக இரண்டு விடயங்களை கவனத்தில் எடுக்க வேண்டும்.


1. விவாதத்தில் பேசப்படும் விடயம் அல்லது விவாதத்தின் கருப்பொருள்
2. விவாதம் செய்கின்ற நபர்


மேற்படி இரண்டுவிடயங்களிலும் ஞானசாரத் தேரர் ஏற்றுக்கொள்ள முடியாத ஒருவராகவே இருக்கிறார்.


முஸ்லிம்கள் தொடர்பில் ஞானசாரத் தேரர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளும் கருத்துக்களும் அர்த்தமற்றவை அது நியாயமற்றவை ஆதாரமற்ற ஆபாண்டமான வீண் வாதங்கள் எனவே அர்த்தமற்ற ஒரு கருத்துடன் இருப்பவருடன் வாதம் புரியவேண்டிய எந்த தேவையும் முஸ்லிம் மக்களுக்கும் இல்லை முஸ்லிம் அரசியல்வாதிகளுக்குமில்லை.


அடுத்து தான்தான் பேச வேண்டும் தான் பேசுவதுதான் சரியானது தனக்கு பதில் சொல்கின்றவர்கள் தலையில்லாதவர்கள் என்ற கருத்துப்பட பல ஊடக சந்திப்புக்களில் ஞானசாரத் தேரர் பதில் கூறியிருப்பதை அறிகிறோம். எனவே யாருடன் எப்படிப் பேச வேண்டும் என்ற அடிப்படை பேச்சு நாகரீகமும் இல்லாத ஒருவருடன் சமமாக இருந்து வாதம் புரிவது ஒழுக்கமுள்ள எமது நாகரீகத்திற்கு நல்லதல்ல.


இவைகளுக்கு அப்பால் ஞானசாரத் தேரர் யார்? இவருக்கும் எங்களுக்கும் என்ன தொடர்பு? இவருக்கு விளக்கமளித்து வாதிக்க வேண்டிய எந்த அவசியமும் எமக்கு இல்லை. இந்த நாட்டில் ஒரு அரசாங்கம் இருக்கிறது. அதில் எமக்கான ஜனநாயகம் இருக்கிறது. நீதியை நிலைநாட்ட சட்டம் இருக்கிறது. எல்லா மதங்களும் சமமாக மதிக்கப்பட வேண்டும் என்ற அரசியல் யாப்பு இருக்கிறது. இவற்றுக்கும் மேலாக எங்களுக்கு பதில் கூறும் ஒருவராக ஜனாதிபதி இருக்கிறார். இதற்கிடையில் ஞானசாரத் தேரர் எங்கிருந்து வந்தவர்.


எனவேதான் தொடரும் பொதுபல சேனாவின் முஸ்லிம் விரோத செயல்களுக்கு அரசாங்கத் தரப்பில் உள்ள பல அமைச்சர்களும் பகிரங்க கருத்துக்களை வெளிப்படுத்துகின்ற இந்நிலையில் ஜனாதிபதி இனியும் மௌனமாக இருக்காது ஏதாவது ஒரு முடிவை வெளிப்படையாக அறிவித்தே ஆகவேண்டும். அவ்வாறில்லையாயின் நாட்டில் ஏற்படும் இனவாத மோதல்கள்களுக்கு அரசாங்கம் வழிவிட்டிருப்ப தாகவே நாட்டு மக்கள் முடிவு கொள்ள வேண்டும்.

இலங்கை அணி வீரர்களுக்கு தலா 2 1/2 கோடி ரூபா பரிசு

Tuesday, April 15, 2014

இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்தை கைப்பற்றிய இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களுக்கு தலா இரண்டரைக் கோடி ரூபா வீதம்’ பரிசு வழங்க இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.

இதுவரை இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் ஒரே தடவையில் இலங்கை அணி வீரர்களுக்கு கிடைத்த மிக கூடுதலான தொகை இது எனவும் அறிவிக்கப்படுகிறது.

அண்மையில் பங்களாதேஷில் நடைபெற்ற 20க்கு இருபது உலகக் கிண்ண போட்டியை இலங்கை அணி முதற் தடவையாக சுவீகரித்தது.

புதுவருட உதயத்துடன் இலங்கை அணி வீரர்கள் 15 பேருக்கும் பரிசுத் தொகையில் தலா 25 மில்லியன் ரூபா வீதம் அன்பளிப்பு செய்ய இருப்பதாக இலங்கை கிரிக்கெட் சபை தவிசாளர் ஹுஸ்னி மொஹமட் தெரிவித்தார். இதன் படி சகல அணி வீரர்களுக்கும் மொத்தமாக 2.8 மில்லியன் ரூபா வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. 20க்கு இருபது கிண்ணத்தை வெற்றிகொண்ட இலங்கை அணிக்கு உலக கிரிக்கெட் சபை வழங்கிய பரிசுத் தொகை இவ்வாறாக அணியை பிரதிநிதித்துவப்படுத்திய 15 வீரர்களுக்கும் சரிசமமாக பகிரப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நாங்கள் பயங்கரவாத அமைப்பு அல்ல - மறுக்கிறது பொதுபல சேனா


நாங்கள் பயங்கரவாத அமைப்பு அல்ல - மறுக்கிறது


பயங்கரவாத அமைப்பு பட்டியலில் பொதுபல சேனா அமைப்பின் பெயர் இணைக்கப்பட்டுள்ளமைக்கு பொதுபல சேனா அமைப்பின் பிரதான நிறைவேற்று அதிகாரி டிலந்த வித்தானகே எதிர்ப்பு தெரிவித்தார்.

இந்த செயல் நகைப்புக்குரியது என அவர் குறிப்பிட்டார்.

பொதுபல சேனா பயங்கரவாத அமைப்பு என பெயரிடப்பட்டுள்ளமை குறித்து Adவிற்கு வழங்கிய விசேட தொலைபேசி செவ்வியில் டிலந்த வித்தானகே இவ்வாறு தெரிவித்தார்.

தமது அமைப்பை பயங்கரவாத அமைப்பாக பெயரிடுவதற்கு முன்னர் தங்களிடம் கலந்தாலோசித்திருக்க வேண்டும் எனவும் அவ்வாறு செய்யப்படாதததால் ஜனநாயகப் பிரச்சினை ஏற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மியன்மார் விரத்து தேரருடன் பொதுபல சேனா தேரர் சந்தித்து படம் எடுத்துக் கொண்டதால் தம்மை பயங்கரவாத அமைப்பு என்று கூற முடியாது எனவும் அப்படியாயின் தடை செய்யப்பட்ட புலிகள் அமைப்புடன் தொடர்பு வைத்திருந்த நோர்வே பயங்கரவாத பட்டியலில் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

பொதுபல சேனா பயங்கரவாத அமைப்பு இல்லை அது மிகவும் பகிரங்கமாக செயற்படும் அமைப்பு என அவர் தெரிவித்தார்.

சிங்கள பௌத்த மக்களுக்கு உலகில் விடுக்கப்படும் அழுத்தம் இதன்மூலம் வெளிப்படுவதாக டிலந்த வித்தானகே கூறினார்.


பயங்கரவாத அமைப்பு பட்டியலில் பொதுபல சேனா அமைப்பின் பெயர் இணைக்கப்பட்டுள்ளமைக்கு பொதுபல சேனா அமைப்பின் பிரதான நிறைவேற்று அதிகாரி டிலந்த வித்தானகே எதிர்ப்பு தெரிவித்தார்.

இந்த செயல் நகைப்புக்குரியது என அவர் குறிப்பிட்டார்.

பொதுபல சேனா பயங்கரவாத அமைப்பு என பெயரிடப்பட்டுள்ளமை குறித்து Adவிற்கு வழங்கிய விசேட தொலைபேசி செவ்வியில் டிலந்த வித்தானகே இவ்வாறு தெரிவித்தார்.

தமது அமைப்பை பயங்கரவாத அமைப்பாக பெயரிடுவதற்கு முன்னர் தங்களிடம் கலந்தாலோசித்திருக்க வேண்டும் எனவும் அவ்வாறு செய்யப்படாதததால் ஜனநாயகப் பிரச்சினை ஏற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மியன்மார் விரத்து தேரருடன் பொதுபல சேனா தேரர் சந்தித்து படம் எடுத்துக் கொண்டதால் தம்மை பயங்கரவாத அமைப்பு என்று கூற முடியாது எனவும் அப்படியாயின் தடை செய்யப்பட்ட புலிகள் அமைப்புடன் தொடர்பு வைத்திருந்த நோர்வே பயங்கரவாத பட்டியலில் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

பொதுபல சேனா பயங்கரவாத அமைப்பு இல்லை அது மிகவும் பகிரங்கமாக செயற்படும் அமைப்பு என அவர் தெரிவித்தார்.

சிங்கள பௌத்த மக்களுக்கு உலகில் விடுக்கப்படும் அழுத்தம் இதன்மூலம் வெளிப்படுவதாக டிலந்த வித்தானகே கூறினார்.  சேனா


பயங்கரவாத அமைப்பு பட்டியலில் பொதுபல சேனா அமைப்பின் பெயர் இணைக்கப்பட்டுள்ளமைக்கு பொதுபல சேனா அமைப்பின் பிரதான நிறைவேற்று அதிகாரி டிலந்த வித்தானகே எதிர்ப்பு தெரிவித்தார்.

இந்த செயல் நகைப்புக்குரியது என அவர் குறிப்பிட்டார்.

பொதுபல சேனா பயங்கரவாத அமைப்பு என பெயரிடப்பட்டுள்ளமை குறித்து Adவிற்கு வழங்கிய விசேட தொலைபேசி செவ்வியில் டிலந்த வித்தானகே இவ்வாறு தெரிவித்தார்.

தமது அமைப்பை பயங்கரவாத அமைப்பாக பெயரிடுவதற்கு முன்னர் தங்களிடம் கலந்தாலோசித்திருக்க வேண்டும் எனவும் அவ்வாறு செய்யப்படாதததால் ஜனநாயகப் பிரச்சினை ஏற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மியன்மார் விரத்து தேரருடன் பொதுபல சேனா தேரர் சந்தித்து படம் எடுத்துக் கொண்டதால் தம்மை பயங்கரவாத அமைப்பு என்று கூற முடியாது எனவும் அப்படியாயின் தடை செய்யப்பட்ட புலிகள் அமைப்புடன் தொடர்பு வைத்திருந்த நோர்வே பயங்கரவாத பட்டியலில் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

பொதுபல சேனா பயங்கரவாத அமைப்பு இல்லை அது மிகவும் பகிரங்கமாக செயற்படும் அமைப்பு என அவர் தெரிவித்தார்.

சிங்கள பௌத்த மக்களுக்கு உலகில் விடுக்கப்படும் அழுத்தம் இதன்மூலம் வெளிப்படுவதாக டிலந்த வித்தானகே கூறினார்.


பயங்கரவாத அமைப்பு பட்டியலில் பொதுபல சேனா அமைப்பின் பெயர் இணைக்கப்பட்டுள்ளமைக்கு பொதுபல சேனா அமைப்பின் பிரதான நிறைவேற்று அதிகாரி டிலந்த வித்தானகே எதிர்ப்பு தெரிவித்தார்.

இந்த செயல் நகைப்புக்குரியது என அவர் குறிப்பிட்டார்.

பொதுபல சேனா பயங்கரவாத அமைப்பு என பெயரிடப்பட்டுள்ளமை குறித்து Adவிற்கு வழங்கிய விசேட தொலைபேசி செவ்வியில் டிலந்த வித்தானகே இவ்வாறு தெரிவித்தார்.

தமது அமைப்பை பயங்கரவாத அமைப்பாக பெயரிடுவதற்கு முன்னர் தங்களிடம் கலந்தாலோசித்திருக்க வேண்டும் எனவும் அவ்வாறு செய்யப்படாதததால் ஜனநாயகப் பிரச்சினை ஏற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மியன்மார் விரத்து தேரருடன் பொதுபல சேனா தேரர் சந்தித்து படம் எடுத்துக் கொண்டதால் தம்மை பயங்கரவாத அமைப்பு என்று கூற முடியாது எனவும் அப்படியாயின் தடை செய்யப்பட்ட புலிகள் அமைப்புடன் தொடர்பு வைத்திருந்த நோர்வே பயங்கரவாத பட்டியலில் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

பொதுபல சேனா பயங்கரவாத அமைப்பு இல்லை அது மிகவும் பகிரங்கமாக செயற்படும் அமைப்பு என அவர் தெரிவித்தார்.

சிங்கள பௌத்த மக்களுக்கு உலகில் விடுக்கப்படும் அழுத்தம் இதன்மூலம் வெளிப்படுவதாக டிலந்த வித்தானகே கூறினார்.

காணாமல் போன விமானமும், வீணாய் பரவும் பொய் செய்திகளும். உங்கள் சந்தேகங்களுக்கு இக்கட்டுரை பதில்.

Thursday, March 13, 2014



கடந்த சனிக்கிழமை அதிகாலை பெய்ஜிங் செல்லும்போது இடைவழியில் வைத்து காணாமல்போன மலேசியன் எயார்லைன்ஸ் MH370 என்கின்ற பயணிகள் விமானத்தினை தேடுகின்ற பணி ஐந்தாவது நாளாக இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது.

முடிவுகள் எதுவும் எட்டப்படாமல் விமானத்தை தேடுகின்ற பணியில் பத்து நாடுகள் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் இந்த வேளையில் "காணாமல் போன விமானம் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டதாக பலரும் போலியான செய்திகளை பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள்"

உண்மையில் இந்த விமானம் தெற்கு சீனக்கடல் பகுதியில் பறந்துகொண்டிருக்கும்போதுதான் ராடாரிலிருந்து மறைந்திருக்கின்றது. ஆனால் மீட்புக்குழுவினர் மலாக்கா நீரிணைப்பகுதியில் விமானத்தை தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த விமானம் மறையும்போது ராடாரிலிருந்து எந்தவிதமான அபாய சமிக்ஞைகளும் விடுக்கப்படவில்லை. காணாமல் போன போயிங் 777-200 வகை விமானங்கள் அதியுயர் தொழிநுட்பத்தில் தயாரிக்கப்பட்டவை விமானம் பறக்கின்ற சமயம் அதில் தொழிநுட்ப கோளாறுகள் ஏற்படுமிடத்து விமானத்தில் இருந்து தன்னியக்கமாகவே செய்திகள் பராமரிப்பு அறைக்கு அனுப்பபடும்.ஆனால் பெரும்பாலான விமானங்களில் கோளாறுகள் ஏற்படுமிடத்து விமான கட்டுப்பாட்டு அறைக்கே தகவல் அனுப்பப்படும் அதுவும் விமானியின் மூலம். இந்தவகையான விமானங்கள் அதற்கு நேர் மாற்றம் மிக்கவை இவை தானாகவே செய்திகளை அனுப்பும் திறன்கொண்டவை.

விமானம் காணமல் போகின்ற சமயம் இப்படியான அபாய சமிக்ஞைகள் எதுவும் பெறப்படவில்லை என்று அடித்துக்கூறுகிறது மலேசிய சிவில் விமான போக்குவரத்து துறை. அவர்கள் விமானம் கடத்தப்பட்டு விட்டது என்கின்ற கோணத்திலேயே இப்போது விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளார்கள். அதற்கு அவர்கள் கூறும் அடிப்படை காரணங்கள் சில,

விமானம் ராடாரிலிருந்து மறைவதற்கு முன்பு எதுவித அபாய சமிக்ஞைகளும் கட்டுப்பாடு அறைக்கு கொடுக்கப்படாமல் சென்ற பாதையிலிருந்து கோலாலம்பூருக்கு திரும்பியிருக்கிறது இது ஏன் என்பது யாருக்கும் புரியாத புதிராகவே இருக்கிறது.

தீவிரமாக கப்பல்கள் மற்றும் விமானங்கள் மூலமாகத் தேடப்பட்டாலும் விமானத்தின் எந்த ஒரு சிறு பாகம் கூட இப்போது வரை கடலிலோ, தரையிலோ கண்டெடுக்கப்படவில்லை. விமானம் ரேடாரில் இருந்து மறைவதற்கு சில நொடிகளுக்கு முன்னர் பாதையில் இருந்து மாறி சென்றிருப்பதால் தேடும் இடத்தின் பரப்பளவு தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. இப்போது இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுக்கும், மலேசியாவுக்கும் நடுவில் உள்ள மலாக்கா ஜலசந்தியின் வடக்குப் பகுதியில் தேடப்படுகிறது. இந்த இடம் விமானம் கடைசியாகப் பறந்த இடத்தைவிட மேற்கில் உள்ளது. ஏன் சம்பந்தம் இல்லாமல் இங்கு தேடுகிறீர்கள் ? என்று மலேசிய சிவில் ஏவியேஷன் துறைத் தலைவர் அசாரூதீன் அப்துல் ரகுமானிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, "சில விஷயங்களை மட்டுமே உங்களிடம் சொல்ல முடியும். சில விஷயங்களை என்னால் உங்களிடம் சொல்ல இயலாது" என்றார்.

மலேசியாவைச் சேர்ந்த பெரிதா ஹரியன் நாளிதழுக்கு விமானப் படைத்தளபதி ராட்சலி தவுத் அளித்த பேட்டியில், மிலிட்டரியின் ராடாரில் நள்ளிரவு 2.40 மணிக்கு MH370 விமானம் மலாக்கா ஜலசந்தியின் வடபகுதியில் இருக்கும் புலாவ் பேராக் தீவின் அருகே கடைசியாக இருந்ததாகத் தெரிவித்துள்ளார். சிவிலியன் ரேடாரில் இறுதியாக பதிவான இடத்துக்கும் மிலிட்டரி ரேடாரில் பதிவான இந்த இடத்துக்கும் கிட்டத்தட்ட 300 கி.மீ. வித்தியாசம் . மலேசியாவின் கோட்டா பாரு பகுதியைத் தாண்டியதும் வழிமாறிய விமானம், அதன்பின் தாழ்வாகப் பறந்து மலாக்கா ஜலசந்தியை நோக்கித் திரும்பியது தற்போது உறுதியாகியுள்ளது. ஆனால்,இந்த தகவலை நாங்கள் வெளியிடவில்லை என மலேசிய அதிகாரிகள் இன்று மறுத்துள்ளனர்.

மலேசியன் ஏர்லைன்ஸ் MH370 விமானத்தில் பயணித்த பயணிகள் பற்றிய தகவல்களை விமான நிறுவனம் வெளியிட்டுள்ளது.

1. சீனா/தாய்வான் - 152 + 1 குழந்தை

2. மலேசியா - 38

3. இந்தோனேசியா - 7

4. ஆஸ்திரேலியா - 6

5. இந்தியா - 5

6. அமெரிக்கா - 3 + 1 குழந்தை

7. பிரான்ஸ் - 4

8. கனடா - 2

9. நியூசிலாந்து - 2

10. உக்ரைன் - 2

11. இத்தாலி - 1

12. நெதர்லாந்து - 1

13. அவுஸ்திரேலியா - 1

14. ரஷ்யா - 1

இப்போதைய நிலவரப்படி 10 நாடுகள் தெற்கு சீன கடல் பகுதியில் (South China Sea) விமானத்தைத் தேடி வருகின்றன. மலேசியா இந்தத் தேடுதல் பணியை முன்னின்று நடத்துகிறது. சீனா, அவுஸ்திரேலியா, தாய்லாந்து, இந்தோனேஷியா, வியட்நாம், சிங்கப்பூர், ஃபிலிப்பைன்ஸ், நியூசிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் மலேசியாவுடன் இணைந்து தேடுகின்றன.

மலேசியா - 14 கடற்படைக் கப்பல்கள் + 13 கோஸ்ட் கார்டு படகுகள் + 16 விமானங்கள்

வியட்நாம் - 8 கப்பல்கள் + 7 விமானங்கள்

சிங்கப்பூர் - 2 போர்க்கப்பல்கள் + 1 நீர்மூழ்கி உதவிக் கப்பல் + 1 சிகோர்ஸ்கி கடற்படை ஹெலிகாப்டர் + 1 C-130 விமானம்

அவுஸ்திரேலியா - 2 P-3C விமானங்கள் + 2 விமானப்படை கண்காணிப்பு விமானங்கள்

தாய்லாந்து - சூப்பர் லினக்ஸ் கடற்படைக் கப்பல் + 1 ரோந்துக் கப்பல்

ஃபிலிப்பைன்ஸ் - 1 ஃபோக்கர் F-27 விமானம் + 1 ஐலாண்டர் விமானம் + 2 ரோந்துக் கப்பல்கள்

இந்தோனேசியா - 4 அதிவிரைவு ரோந்துக் கப்பல்கள் + 1 கடல்பகுதி ரோந்து விமானம்

சீனா - 9 போர்க்கப்பல் + 1 பீரங்கிக் கப்பல் + 1 லேண்டிங் கிராஃப்ட் கப்பல் + 1 டெஸ்ட்ராயர் வகை போர்க்கப்பல் + 1 கமாண்டோ கேரியர் வகை கப்பல் + 50 கடற்படை வீரர்கள்

அமெரிக்கா - தெற்கு சீன கடல் பகுதியில் ஏற்கனவே பயிற்சியில் இருந்த 2 டெஸ்ட்ராயர் வகை போர்க்கப்பல்கள் + 2 MH60 சீஹாக் ஹெலிகாப்டர்கள் என்பவற்றை வழங்கியிருக்கின்றது. மேலும்,

அமெரிக்காவில் இருந்து NTSB (National Transportation Security Board) வல்லுனர்களும், போயிங் விமான நிறுவனத்தின் வல்லுனர்களும், FAA (Federal Aviation Administration) நிபுணர்களும் கோலாலம்பூருக்கு விரைந்திருக்கின்றனர். சீனா தன்னிடம் இருக்கும் 10 ஹை-ரெசல்யூஷன் சட்லைட்டுகளை இந்த தேடுதல் பணிக்காக திருப்பிவிட்டிருக்கிறது,

தேடுதல் பணியின்போது கடலில் எண்ணெய்ப் படலங்கள் மிதந்துகொண்டிருந்ததைப் பார்த்த தேடுதல் குழுவினர், அதை ஆராய்ச்சி செய்ததில் அது விமானத்தின் எரிபொருள் அல்ல என்று தெரிவித்துள்ளனர். வியட்நாம் விமானப் படையினர் தேடும்போது விமானத்தின் கதவு போன்ற ஒரு பாகம் கடலில் மிதப்பதைப் பார்த்திருந்திருக்கின்றனர், ஆனால், அது கடலில் செல்லும் கேபிளின் கெப் என்று தெரியவந்துள்ளதாக மலேசிய சிவில் ஏவியேஷன் துறையின் இயக்குனர் அசாரூதீன் அப்துல் ரகுமான் கூறியுள்ளார். எனவே, இப்போதைய நிலவரப்படி விமானத்தின் ஒரு பாகம்கூட கிடைக்கவில்லை என்பதே உண்மை.

மாயமான மலேசிய விமானத்தின் பைலட்டின் பெயர் ஜஹாரி அஹமத் ஷாஹ். 33 வருடங்களாக பைலட்டாக இருக்கும் இவருக்கு 53 வயது ஆகிறது. மொத்தம் 18,365 மணி நேரங்கள் விமானம் ஓட்டிய அனுபவம் கொண்டவர். விமானம் ஓட்டுவதை தொழிலாகப் பார்க்காமல் விருப்பத்தின் பெயரால் செய்தவராம். தற்போது தான்இயக்கிய போயிங் 777 விமானத்தின் மீது பெரும் ஆர்வம் கொண்ட இவர், வீட்டில் அதே விமானத்தின் சிமுலேட்டரை அமைத்து, அதில் பயிற்சி பெற்று வந்தார் என்கின்றனர் அவருடன் வேலை பார்த்தவர்கள்.

சிமுலேட்டர் பயிற்சி பெறும் மற்ற விமானிகளுக்கு பரீட்சை வைக்க, மலேசிய சிவில் ஏவியேஷன் துறையினால் ஜஹாரி அஹமத் ஷாஹ் அங்கீகரிக்கப்பட்டவர் என மலேசியன் ஏர்லைன்ஸில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

33 வருடங்களாக மலேசியன் ஏர்லைன்ஸில் பணியாற்றும் இவர் ஃபோக்கர் F50, ஏர்பஸ் A300 மற்றும் போயிங் 737 போன்ற பலதரப்பட்ட விமானங்களை இயக்கிய அனுபவம் கொண்டவர். மலேசிய விமானம் மாயமானதற்கு விமானிகளின் தவறு காரணமாக இருக்கவே வாய்ப்பில்லை என்று விமானிகளிடம் தொடர்பில் இருந்தவர்கள் கூறுகின்றனர்.

தீவிரவாதிகள் இந்த விமானத்தைக் கடத்தியிருக்கவோ அல்லது மூழ்கடித்திருக்கவோ கூடும் என்ற கோணத்திலும் விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. விமானத்தில் பயணம் செய்த இரண்டு பேர் போலி பாஸ்போர்ட்டில் பயணம் செய்தது ஏற்கனவே தெரிந்த விஷயம்தான். இதில் ஒரு பாஸ்போர்ட் இத்தாலியையும், இன்னொரு பாஸ்போர்ட் ஆஸ்திரியாவைச் சேர்ந்தவர்களுடையது ஆகும். இந்த பாஸ்போர்ட்டுகளில் பயணித்தவர்களுடைய விமான டிக்கெட், வியாழக்கிழமை தாய்லாந்தில் வாங்கப்பட்டிருக்கிறது. இதில் ஒரு டிக்கெட் பீஜிங் வழியாக ஜெர்மனியில் உள்ள ஃப்ராங்ஃபர்ட்-க்கும், இன்னொரு டிக்கெட் டென்மார்க்கில் உள்ள கோபன்ஹேகனுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இரண்டு பாஸ்போர்ட்டுகளுடைய உண்மையான உரிமையாளர்கள் விமானத்தில் பயணிக்கவில்லை. இத்தாலியைச் சேர்ந்தவருடைய பாஸ்போர்ட் 2012ஆம் ஆண்டிலும், ஆஸ்திரியாவைச் சேர்ந்தவருடைய பாஸ்போர்ட் 2013ஆம் ஆண்டிலும் தாய்லாந்தில் திருடப்பட்டுள்ளது. இந்த இருபாஸ்போர்ட்டுகளுமே இன்டர்போலின் டேட்டாபேஸில் இருக்கிறது. எப்படி போலி பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் ஒரு பன்னாட்டு விமானத்தில் ஏறமுடிந்தது என இன்டர்போல் கேள்வி எழுப்பியுள்ளது.

திருடப்பட்டுள்ள பாஸ்போர்ட்டில் பயணித்த ஒருவர் ஈரானைச் சேர்ந்த Pouria Nour Mohammad Mehrdad என்ற 19 வயது வாலிபர். இவருடைய தாயார் ஃப்ராங்க்ஃபர்ட் விமான நிலையத்தில் மகனுக்காக காத்திருந்திருக்கிறார். அவரிடம் விசாரித்ததை வைத்து இந்த ஈரானியர் எந்த தீவிரவாதக் குழுவையும் சேர்ந்தவர் இல்லை என்பது தெரியவந்துள்ளது. மேலும், புகலிடம் தேடித்தான் அவர் ஃப்ராங்க்ஃபர்ட்டுக்கு போலி பாஸ்போர்ட் மூலம் பயணித்தார் என்று சொல்லப்படுகிறது. இன்னொரு போலி பாஸ்போர்ட்டின் உண்மையான உரிமையாளர் Christian Kozel என்ற அவுஸ்திரேலியர் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டார். எனவே போலி பாஸ்போர்ட்டில் பயணித்த இருவரும் புகலிடம் தேடியே ஐரோப்பாவுக்கு பயணித்தது உறுதியாகியுள்ளது. மேலும், தீவிரவாதச் செயலுக்கான எந்தவிதமான தடயங்களும், ஆதாரங்களும் இதுவரை கிடைக்கவில்லை !

காணாமல் போன MH370 போயிங் 777-200 விமானத்தில் கடைசியாக ஃபிப்ரவரி 23ஆம் தேதி வழக்கமான பராமரிப்புப் பணிகள் செய்யப்பட்டிருக்கிறது. அப்போது விமானத்தில் எந்தவித கோளாறும் காணப்படவில்லை என்று மலேசியன் ஏர்லைன்ஸ் க்ரூப்பின் சி.இ.ஓ அஹமத் ஜௌஹரி யாயா தெரிவித்துள்ளார். கடந்த 2002ஆம் ஆண்டு மலேசியன் ஏர்லைன்ஸ் இந்த விமானத்தை வாங்கியுள்ளதாகவும், இதுவரை 53,465.மணி நேரங்கள் பறந்திருக்கிறதாகவும் அவர் கூறியுள்ளார்.

போயிங் 777-200 விமானம் சர்வதேச அளவில் மிகவும் பாதுகாப்பான விமானம் என தகவல்கள் கூறுகின்றன. கடைசியாக 2013ஆம் வருடம் சான் ஃப்ரான்சிஸ்கோவில் ஏசியானா ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று ஓடுதளத்தின் அருகே விபத்துக்குள்ளாகி 3 பேர் இறந்தது மட்டுமே இதுவரை போயிங் 777 ரக விமானத்தில் ஏற்பட்ட பெரிய விபத்து ஆகும் !

இந்நிலையில், மலேசியாவைச் சேர்ந்த இருவர் வழக்கத்தைவிட வேறு ஒரு வழியில், வானத்தில் தாழ்வாகப் பறந்த விமானம் ஒன்றைப் பார்த்ததாகக் கூறியுள்ளனர்.

மலேசியாவின் கெடெரே (Ketereh) பகுதில் வசிக்கும் அலிஃப் ஃபாதி அப்துல் ஹதி என்ற ஒருவர் நள்ளிரவு 1.45 மணி அளவில் தன் வீட்டில் இருந்து விமானங்கள் மேலே எழும்பும்போதும், தரையிறங்கும்போதும் ஒளிரவிட்டு இருக்கும் பளீரென்ற வெளிச்சம் ஒன்றைப் பார்த்ததாகத் தெரிவித்துள்ளார். அந்த வெளிச்சம் கொஞ்சம் கொஞ்சமாக உயரம் குறைந்து வந்ததாகவும், வழக்கத்தைவிட மாறுவழியில் 'பச்சோக்' என்ற கடலை ஒட்டிய பகுதியை நோக்கி அந்த வெளிச்சம் சென்றதாகவும் தெரிவித்துள்ளார். அப்போது எதுவும் தோன்றவில்லை எனவும், மாயமான விமானத்தைப் பற்றி கேள்விப்பட்டவுடன், போலீசிடம் இதைப் பற்றிக் கூற முடிவெடுத்ததாகவும் கூறியிருக்கிறார்.

இவர் இருக்கும் பகுதியில் இருந்து 8 கி.மீ. தொலைவில் இருக்கும் குயாலா பேசுட் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ஆசித் இப்ராகிம் என்ற 55 வயது மீனவர் ஒருவரும் இரவு 1.30 மணி அளவில் ஒரு தாழ்வாகப் பறந்த விமானத்தைப் பார்த்தாராம். வழக்கமாக விமான விளக்குகளின் வெளிச்சம் தொலைவில் உள்ள நட்சத்திரத்தைப் போலத்தான் இருக்கும். ஆனால், தான் பார்த்த வெளிச்சம் பளீரென்று இருந்ததாகவும், மேகங்களுக்குக் கீழ் தாழ்வாகப் பறந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இதுவரை விடை கிடைக்காத கேள்விகளாக பல உள்ளன.

1. விமானத்தில் பயணித்த சில பயணிகளின் செல்ஃபோன் ஒலித்தது குழப்பத்தை மேலும் அதிகரித்திருக்கிறது. அதுமட்டுமில்லாமல் ஒரு பயணியின் QQ அக்கவுன்ட் (சீன சோஷியல் நெட்வொர்க்கிங் வலைதளம் ) திங்கள்கிழமை மதியம் வரை 'ஆக்டிவ்'-ல் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. விமானத்தில் இருந்த 19 சீனப் பயணிகளின் குடும்பங்கள் தாங்கள் விமானத்தில் பயணித்தவர்களுக்கு தொலைலைபேசியில் அழைத்ததாகவும், ரிங்-டோன் வந்தாலும், அழைப்பை யாரும் ஏற்கவில்லை எனவும் எழுதிக்கொடுத்திருக்கின்றனர்.

ஆனால், பீஜிங்கில் இருக்கும் மலேசியன் ஏர்லைன்ஸின் பிரதிநிதி இக்னேஷியஸ் ஆங், தான் ஒரு பயணியின் தொலைபேசிக்கு ஐந்து முறை அழைத்தாகவும், ரிங்-டோன் கேட்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

2. மலேசியாவின் கோட்டா பாரு பகுதியைத் தாண்டியதும் ஏன் விமானம் வழிமாறிச் சென்றது ?

3. விமானத்தில் கோளாறு என்றால் ஏன் விமானிகள் கட்டுப்பாட்டு அறைக்குத் தெரிவிக்கவில்லை ?

4. விமானம் பாதை மாறியதை ஏன் மலேசியன் ஏர்லைன்ஸுக்கும், கட்டுப்பாட்டு அறைக்கும் விமானிகள் தெரிவிக்கவில்லை ?

5. ஏன் விமானத்தில் இருந்து வரவேண்டிய அபாய சமிக்ஞை (Distress Signal) இதுவரை கிடைக்கவில்லை ?

6. கடலிலோ/தரையிலோ விழுந்திருந்தால் விமானத்தின் பிளாக்பாக்ஸ் தொடர்ந்து அனுப்பும் சமிக்ஞைகள் இதுவரை பெறப்படவில்லை.

7. எப்படி சில பயணிகளின் தொலைலைபேசிகள் திங்கள்கிழமை மதியம் வரை இயக்கத்தில் இருந்தது ? அதன்பின் எப்படி இயக்கம் நின்றது ?

என்ற கேள்விகள் தற்போது எழுந்துள்ளன.

இதற்குமுன் இதேபோன்ற ஒரு சம்பவம் உலக வரலாற்றில் நடந்துள்ளது. 2009ஆம் வருடம் ஜூன் மாதம் ஏர் ஃப்ரான்ஸ் விமானம் ஒன்று ரியோ டி ஜெனிரோவில் இருந்து பாரிஸுக்குச் சென்றது. ஏர்பஸ் A300 ரக விமானமான இது கடலின் மேல் ரேடார்களின் கண்காணிப்புப் பகுதிக்கு அப்பால் பறக்கும்போது காணாமல்போனது. 6 மணிநேரங்களுக்குப் பிறகுதான் ஃப்ரான்ஸ் நாட்டினால் இந்த காணாமல் போன சம்பவத்தை ஏற்றுக்கொள்ளவே முடிந்தது. ஏர்பஸ் A300 ரக விமானமும் பாதுகாப்பான விமானம்தான். இந்த விமானமும் அபாய சமிக்ஞை (Distress Signal) அனுப்பவில்லை. 17,000 சதுர கி.மீ. பரப்பளவில் இந்த விமானத்திற்காக தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இந்த விமானத்தின் பாகங்கள் ஐந்து நாள்கள் கழித்து பிரேசிலுக்கும் ஆஃப்ரிக்காவுக்கும் நடுவில் இருக்கும் அட்லாண்டிக் கடலில் இருந்து எடுக்கப்பட்டது. ஆனால், இந்த விமானத்தின் பிளாக்பாக்ஸும், காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டரும் 2 வருடங்கள் கழித்து கடலுக்கு அடியில் அதிக ஆழத்தில் இருந்து எடுக்கப்பட்டது. மொத்தம் 3 வருடங்கள் கழித்துதான் அந்த விமானம் கடலில் விழுந்ததற்கான மர்மம் விலகியது!

மலேசியன் ஏர்லைன்ஸ் MH370 விமானத்தின் பிளாக்பாக்ஸும், காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டரும் கிடைக்கும் வரை இந்த கேள்விகளுக்கு விடை தெரிய வாய்ப்பில்லை !

இந்த தகவல்களில் சிலவற்றை நிவ்யோர்க் டைம்ஸ் பத்திரிகையின் செய்தியாளர் Matthew L. Wald அவர்களும் சிலவற்றை விகடன் செய்தியாசிரியர் ராஜா ராமமூர்த்தி அவர்களும் எழுதியிருந்தார்கள். அந்த செய்திகளின் தகவல்களை வைத்து இந்த செய்தி எழுதப்பட்டது. தகவல்களை தந்த இருவருக்கும் நன்றிகள்.

மூலச்செய்தி : The New York Times
By: Tm Ijlan.

மடிகே மிதியால ப்ரீமியர் லீக், இறுதிப் போட்டி சமநிலையில் முடிவு. (Photos)

Monday, December 9, 2013




கடந்த மூன்று நாட்களாக அதாவது 06,07,08/12/2013 மடிகே மிடியால ரெட் ரோஸ் அணியால் ஏற்பாடு செய்யப் பட்ட கிரிகட் சுற்றுப் போட்டியொன்று மடிகே மிடியால பொது விளையாட்டரங்கில் நடைபெற்றது.

இப்போட்டிகளில் வெற்றி பெரும் அணிக்கு வழங்கப்படும் பரிசில்கலாவன முதல் இடத்தைப் பெரும் அணிக்கு வெற்றிக்கின்னமும், 40,000 ரூபா பணப்பரிசும், இரண்டாவது இடத்தைப் பெரும் அணிக்கு வெற்றிக்கின்னமும் 20,000 ரூபா பணப்பரிசும், மற்றும் சிறந்த துடுப்பாட்டவீரர், சிறந்த பந்து வீச்சாளர் ஆகியோருக்கும் வெற்றிக்கிண்ணம் வழங்கப் படுமென அறிவிக்கப் பட்டிருந்தது.


கடந்த வெள்ளிக்கிழமை மாலை ஆரம்பமான இந்தப் போட்டியில் இருவதுக்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டது குறிப்பிடத் தக்கது. ( RH )

இதில் இறுதியில் நேற்று மாலை அரை இறுதிப் போட்டியில்  பண்டார கொஸ்வத்த அணியும், பொதுஹெர ட்ரை ஸ்டார் அணியும் மோதியது, அதில் ட்ரை ஸ்டார் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. அடுத்த அரை இறுதியில் மடிகே மிதியால ரெட் ரோஸ் அணியும், மடிகே மிதியால வயம்ப ரோயல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தியது. அதில் ரெட் ரோஸ் அணி வெற்றி பெற்று பொதுஹெர ட்ரை ஸ்டார் அணியுடன் இறுதிப் போட்டியில் மோதுவதற்கு தகுதி பெற்றது.


இறுதியாக பலம் மிக்க அணிகளுக்கிடையிலான இறுதிப் போட்டி  சுமார் மாலை 5.45 மணியளவில் இடம் பெற்றது. நேரம் போதாமையின் காரணமாக ஓவருக்கு 4 பந்துகள் என மட்டுப் படுத்தப்பட்டு, 3 ஓவர்களைக் கொண்ட போட்டியாக இறுதிப் போட்டி சுருக்கமடைந்தது. இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பொதுஹெர ட்ரை ஸ்டார் அணி 3 ஓவர்கள் முடிவுக்கு (12 பந்துகள்) 27 ஓட்டங்களைப் பெற்றது.




பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய மடிகே மிதியால ரெட் ரோஸ் அணிக்கு வெற்றி இலக்காக 28 ஓட்டங்கள் பெற வேண்டி இருந்தது. இருள் சூழ்ந்திரிந்தன் காரணமாக அந்த இலக்கு கஷ்டமாகத் தான் இருந்தது. இருந்தும் ரெட் ரோஸ் அணி போட்டியை சிரமத்துக்கு மத்தியில் சமநிலைப் படுத்தியது.



பின்னர் நேரம் பற்றாக்குறை காரணமாக வெற்றிக்கின்னத்துக்காக டொஸ் போடப்பட்டது, அதில் பொதுஹெர ட்ரை ஸ்டார் அணி வெற்றிபெற்று வெற்றிக்கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது, இரண்டு பணப்பரிசில்களையும் சேர்த்து  இரு சம பங்குகளாகப் பிரிக்கப் பட்டு இரு அணிகளுக்கும் தலா 30,000 ரூபா பகிர்ந்தளிக்கப் பட்டது.




News & Photos by: RH
 

Follow On Facebook

F (Space) Msg1st Sent To 40404

Midiyala Background

Most Reading

Tags

Midiyala Hot News Presentetion. Powered by Blogger.