Midiyala Hot News

Blogger news

www.doenets.lk/exam

Tuesday, January 29, 2013

RESULTS: GCE(A/L)-2012 Exam Results Paarvai ida>>>>

http://www.doenets.lk/exam/

குருநாகலில் முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் மூடல்

Friday, January 25, 2013




நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்த தின நிகழ்வை முன்னிட்டு இன்று குருநாகல் மற்றும் முஸ்லிம்கள் செறிந்து வாழும் குருநகால் நகரை அண்மித்த பிரதேசங்களிலான தெலியா கொன்ன, மல்லவப்பிட்டிய ஆகிய பகுதிகளில் முஸ்லிம் வியாபார நிலையங்கள்  மூடப்பட்டிருந்தது.
அண்மைக்காலமாக முஸ்லிம்களின் மீது தொடுக்கப்பட்டு வரும் இனவாத அச்சுறுத்தல்களுக்கு முஸ்லிம்களின் ஒற்றுமை இன்றியமையாத ஒரு சேவையாக கருதப்படும் இந்தச் சந்தப்பத்தில் குருநாகல் பசார் ஜும்ஆப் பள்ளிவாசல் நிர்வாக சபை மற்றும் தெலியாகொன்ன, மல்லவப்பிட்டிய பள்ளிவாசல்களின் நிர்வாக சபைகளும் குருநாகல் முஸ்லிம் இளைஞர் அமைப்பும் குருநாகல் மாநகர சபை உறுப்பினரும் ஸ்ரீ. சு. கட்சியின் குருநாகல் மாவட்ட அமைப்பாளருமான அப்துல் சத்தார் ஆகியோர் இணைந்து இதற்கான வேண்டுதலை விடுத்திருந்தனர்.
முஸ்லிம்களின் இந்த நிகழ்வுக்கு ஆதராவாக சில சிங்கள தமிழ் இனத்தைச் சார்ந்தவர்களின் கடைகளும் இன்று மூடுப்பட்டு இருந்தன. எனினும் முஸ்லிம் நிறுவனங்களான நோலிமிட் பெசன்பக். ஹமீடியா போன்ற வர்த்தக நிலையங்கள் மூடப்படாமை இருந்தது குறிப்பிடத்தக்கது.

காத்தான்குடியில் பாம்பு மழை (படம் இணைப்பு)

Posted on 25/01/2013
DSC01916tm-
காத்தான்குடியின் சில பகுதிகளில் இன்று (25.1.2013) காலை பாம்பு மழை பெய்துள்ளதாக பிரதேச வாசிகள் காத்தான்குடி இன்போவிற்கு தெரிவித்தனர்.
காத்தான்குடி 6ம் குறிச்சி அமானுல்லா வீதி மற்றும் காத்தான்குடி ஜன்னத் மாவத்தை ஆகிய பகுதிகளிலேயே இந்த பாம்புமழை பெய்துள்ளது.
காத்தான்குடி அமானுல்லா வீதியிலுள்ள ஒரு வீட்டிலும் ஜன்னத் மாவத்தையிலுள்ள ஒரு வீட்டிலுமே இந்த பாம்பு மழை பெய்துள்ளது.
ஜன்னத் மாவத்தையில் வசிக்கும் பெண்மனியொருவர் தனது வீட்டின் வளாகத்தில் நின்று கொண்டிருந்த போது மழையுடன் சேர்ந்தாற்போல் பாம்புகள் இரண்டு வந்து விழுந்ததாகவும் அதில் ஒன்று தனது தோல் பட்டையில் விழுந்து ஓடியதாகவும் தெரிவித்தார்.
இந்த பாம்புகள் எந்த இனத்தை சேர்ந்த பாம்புகள் என்பது பற்றி தங்களுக்கு தெரியாது எனவும் பிரதேச வாசிகள் தெரிவித்தனர்.
DSC01917 DSC01916 DSC01915 DSC01914 DSC01913 DSC01912 DSC01911

www.midiyalanews.blogspot.com

Wednesday, January 23, 2013


,d;W Kjy; cq;fs; ghu;itf;F..
https://twitter.com/MidiyalaHot
http://www.facebook.com/midiyala.hotnews

பிடியாணையின்றி பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ஒருவரை 48 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரிக்கும் அதிகாரத்தை பொலிஸாருக்கு வழங்கும் சட்டமூலம்

Tuesday, January 22, 2013


TM.பிடியாணையின்றி பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ஒருவரை நீதிமன்றில் ஆஜர்படுத்தாமல் 24 மணித்தியாலங்கள் மட்டுமே தடுத்து வைத்து விசாரிக்கலாம் என்றிருந்த சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுடனேயே குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவை (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் சமர்ப்பிக்கப்படவிருக்கின்றது.

இந்த சட்டமூலத்தின் 8 ஆம் வாசகமானது அரசியலமைப்புக்கு அமைவாக இல்லையெனவும் இதனால் இந்த குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவை (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலத்தை விசேட பெரும்பான்மையுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டுமெனவும் உயர்நீதிமன்றம் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிடியாணையின்றி பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ஒருவரை 48 மணித்தியாலங்கள் தடுத்துவைப்பதற்காக 15 வகையான தவறுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவையாவன...

1.    கொலை.
2.    கொலையாகாத குற்றமுடைய மரணம் (கைமோச கொலை).
3.    கொலை முயற்சி.
4.    கொலை புரிவதற்காக ஆட்கவர்தல் அல்லது ஆட்கடத்தல்.
5.    தவறாக அடைத்துவைக்கும் நோக்கில் ஆளொருவரை ஆட்கடத்தல் அல்லது ஆட்கவர்தல்.
6.    கடுங்காயத்திற்கு உட்படுத்தும் உளக்கருத்துடன் (நோக்கத்துடன்) ஆட்கடத்தல் அல்லது ஆட்கவர்தல்.
7.    ஆளொருவரை மறைத்துவைத்தல் அல்லது அடைத்துவைத்தல்.
8.    கற்பழிப்பு.
9.    மரணத்தை ஏற்படுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்துவிட்டு புரியப்படும் திருட்டு.
10.  மரணம் அல்லது கடுங்காயம் விளைவிக்கும் வகையில் கொள்ளை.
11.  மரணம் விளைவிக்கக்கூடிய ஆயுதந்தாங்கிய படுகொலை.
12.  மேற்கூறப்பட்ட எவையேனும் தவறுகளுக்கு புரியும் முயற்சி.
13.  வெடிப்பொருட்களை, தீங்குவிளைவிக்கும் ஆயுதம் ஒன்றை அல்லது துவக்கு ஒன்றைப் பயன்படுத்தி        புரியப்படும் தவறு.
14.  மேற்கூறப்பட்ட தவறொன்றுக்கு உடந்தையாக செயற்படல்.
15.  மேற்கூறப்பட்ட தவறொன்றுக்கு உடந்தையளிப்பதற்கு அல்லது தவறைப்புரிவதற்கு சூழ்ச்சி செய்தல்.

இந்த குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவை (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் நாடாளுமன்றத்தில் 2012 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 11 ஆம் திகதி நீதியமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
MidiyalaHot & Team

ரிசானா குடும்பத்திற்கு ஜனாதிபதி மஹிந்த 10 லட்சம் ரூபா நன்கொடை



ரிசானா குடும்பத்திற்கு ஜனாதிபதி மஹிந்த 10 லட்சம் ரூபா நன்கொடை சவுதி அரேபியாவில் சிரச்சேதம் செய்யப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட மூதுரைச் சேர்ந்த இலங்கை பணிப்பெண் ரிசானா நபீக்கின் குடும்பத்தாருக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 10 லட்சம் ரூபாவை நன்கொடையாக வழங்கியுள்ளார்.
இதற்கான நிகழ்வு இன்று (22) அலரி மாளிகையில் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது

Midiyala Hot News Present

Monday, January 21, 2013

Anbulla Vaadikkaiyalarkalukku, MidiyalaHot Ungalukkena Thaniyana Puthiya Parimanathudan January 24 Thihathi Muthal Ethirparungal.......

குண்டுத் தாக்குதலில் 12 ஷியா முஸ்லிம்கள் பலி

Sunday, January 20, 2013

 குண்டுத் தாக்குதலில் 12 ஷியா முஸ்லிம்கள் பலி:   ஈராக் தலைநகர் பாக்தாத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 12 ஷியா முஸ்லிம்கள் பலியாகியுள்ளனர். பாக்தாத்தில் உள்ள சமரா என்ற புனித...

ஈராக்கில் தற்கொலை தாக்குதல் - எம்.பி.உள்ளிட்ட நால்...

Thursday, January 17, 2013

Fastnews1st: ஈராக்கில் தற்கொலை தாக்குதல் - எம்.பி.உள்ளிட்ட நால்...:   ஈராக்கில் சன்னி, ஷியா முஸ்லிம்களிடையே மத சடங்குகள் நடத்துவதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரச்சினைகள் எழுந்து வருகிறன. இதனால் ஒருவரை ஒ...

உணவுப் பொருட்களில் அதிக சீனி, உப்புக்கு கட்டுப்பாட...

Fastnews1st: உணவுப் பொருட்களில் அதிக சீனி, உப்புக்கு கட்டுப்பாட...: . இலங்கைச் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற உணவு மற்றும் சுவையூட்டப்பட்ட பானங்களுக்குச் சேர்க்கப்பட்டிருக் கின்ற சீனி மற்றும் உப்பின் அளவ...

ஓசோனை பெருமளவில் பாதிப்பது கடல்களே - ஆய்வு

Tuesday, January 15, 2013

ஓசோனை பெருமளவில் பாதிப்பது கடல்களே - ஆய்வு:   பூமியில் உள்ள கடல்களில் இருந்து வெளியாகும் வாயு தான் ஓசோன் அடுக்கை பெருமளவில் பாதிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. நியூயார்க் பல்கலைக்கழகத...
 

Follow On Facebook

F (Space) Msg1st Sent To 40404

Midiyala Background

Most Reading

Tags

Midiyala Hot News Presentetion. Powered by Blogger.