Midiyala Hot News

Blogger news

மடிகே மிதியால ப்ரீமியர் லீக், இறுதிப் போட்டி சமநிலையில் முடிவு. (Photos)

Monday, December 9, 2013




கடந்த மூன்று நாட்களாக அதாவது 06,07,08/12/2013 மடிகே மிடியால ரெட் ரோஸ் அணியால் ஏற்பாடு செய்யப் பட்ட கிரிகட் சுற்றுப் போட்டியொன்று மடிகே மிடியால பொது விளையாட்டரங்கில் நடைபெற்றது.

இப்போட்டிகளில் வெற்றி பெரும் அணிக்கு வழங்கப்படும் பரிசில்கலாவன முதல் இடத்தைப் பெரும் அணிக்கு வெற்றிக்கின்னமும், 40,000 ரூபா பணப்பரிசும், இரண்டாவது இடத்தைப் பெரும் அணிக்கு வெற்றிக்கின்னமும் 20,000 ரூபா பணப்பரிசும், மற்றும் சிறந்த துடுப்பாட்டவீரர், சிறந்த பந்து வீச்சாளர் ஆகியோருக்கும் வெற்றிக்கிண்ணம் வழங்கப் படுமென அறிவிக்கப் பட்டிருந்தது.


கடந்த வெள்ளிக்கிழமை மாலை ஆரம்பமான இந்தப் போட்டியில் இருவதுக்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டது குறிப்பிடத் தக்கது. ( RH )

இதில் இறுதியில் நேற்று மாலை அரை இறுதிப் போட்டியில்  பண்டார கொஸ்வத்த அணியும், பொதுஹெர ட்ரை ஸ்டார் அணியும் மோதியது, அதில் ட்ரை ஸ்டார் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. அடுத்த அரை இறுதியில் மடிகே மிதியால ரெட் ரோஸ் அணியும், மடிகே மிதியால வயம்ப ரோயல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தியது. அதில் ரெட் ரோஸ் அணி வெற்றி பெற்று பொதுஹெர ட்ரை ஸ்டார் அணியுடன் இறுதிப் போட்டியில் மோதுவதற்கு தகுதி பெற்றது.


இறுதியாக பலம் மிக்க அணிகளுக்கிடையிலான இறுதிப் போட்டி  சுமார் மாலை 5.45 மணியளவில் இடம் பெற்றது. நேரம் போதாமையின் காரணமாக ஓவருக்கு 4 பந்துகள் என மட்டுப் படுத்தப்பட்டு, 3 ஓவர்களைக் கொண்ட போட்டியாக இறுதிப் போட்டி சுருக்கமடைந்தது. இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பொதுஹெர ட்ரை ஸ்டார் அணி 3 ஓவர்கள் முடிவுக்கு (12 பந்துகள்) 27 ஓட்டங்களைப் பெற்றது.




பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய மடிகே மிதியால ரெட் ரோஸ் அணிக்கு வெற்றி இலக்காக 28 ஓட்டங்கள் பெற வேண்டி இருந்தது. இருள் சூழ்ந்திரிந்தன் காரணமாக அந்த இலக்கு கஷ்டமாகத் தான் இருந்தது. இருந்தும் ரெட் ரோஸ் அணி போட்டியை சிரமத்துக்கு மத்தியில் சமநிலைப் படுத்தியது.



பின்னர் நேரம் பற்றாக்குறை காரணமாக வெற்றிக்கின்னத்துக்காக டொஸ் போடப்பட்டது, அதில் பொதுஹெர ட்ரை ஸ்டார் அணி வெற்றிபெற்று வெற்றிக்கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது, இரண்டு பணப்பரிசில்களையும் சேர்த்து  இரு சம பங்குகளாகப் பிரிக்கப் பட்டு இரு அணிகளுக்கும் தலா 30,000 ரூபா பகிர்ந்தளிக்கப் பட்டது.




News & Photos by: RH

பாடசாலை மாணவர் கொலை விவகாரம் : மடிகே மிதியாலயில் மக்கள் ஆர்ப்பாட்டம்

Tuesday, December 3, 2013

பாடசாலை மாணவர் கொலை விவகாரம் : மடிகே மிதியாலயில் மக்கள் ஆர்ப்பாட்டம்

சுமார் மூன்று மாதங்களுக்கு முன்னாள் குருநாகல் மாவட்டம் வாரியபொலைக்கு அருகாமையில் அமைந்துள்ள மடிகே மிதியாலை எனும் கிராமத்தில் உள்ள மடிகே மிதியால மத்திய கல்லூரியில் 18 வயதான முஹம்மத் ரிபாத் யூசுப் என்ற மாணவனின் உடல் தூக்கில் தொங்கி, உயிரிழந்த நிலையில் ஊர் மக்களால் கண்டு பிடிக்கப் பட்டது.

இந்த நிகழ்வு ஒரு திட்டமிடப்பட்ட கொலையே என பாதிக்கப்பட்டவரின் குடும்பமும், ஊர் மக்களும் உரிய அதிகாரிகளிடம் கூறிய போதும், மரணப் பரிசோதகர் இது தற்கொலைதான் என ரேபோட் கொடுத்திருந்தார், மடிகே மிதியாலைக்கு பொறுப்பான வாரியபொல போலிஸ் தரப்பும் அதையே தனது முடிவாகவும் அறிவித்திருந்தது.

இருந்தும் பாதிக்கப்பட்டோரின் முயற்சியால் இந்த விடயம் மேலிடத்திற்கு அறியப்படுத்தப்பட்டு, பின்னர் இந்த மரண விசாரணையை குளியாப்பிட்டிய போலிஸ் பிரிவொன்ருக்கு ஒப்படைக்கப்பட்டது.

இதனடிப்படையில் அவர்கள் மேற்கொண்ட விசாரணையில் இது திட்டமிடப்பட்ட கொலைதான் என உறுதியானதுடன், அதனுடன் சம்பந்தப் பட்ட நான்கு பேரை சென்ற 28 ஆம் 29 ஆம் திகதிகளில் அந்த போலிஸ் பிரிவு கைது செய்தது.

இந்த கொலைச் சம்பவத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இன்று மடிகே மிதியாலையில் ஒரு பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் வாரியபொல போலிஸ் நேர்மையாக நடக்கவில்லை என்றும், இன்னும் இந்த கொலைச்சம்பவத்துடன் தொடர்புடைய இன்னும் சிலர் கைது செய்யப் படவில்லை என்றும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் கோசம்களை எழுப்பினர்.


















 

Follow On Facebook

F (Space) Msg1st Sent To 40404

Midiyala Background

Most Reading

Tags

Midiyala Hot News Presentetion. Powered by Blogger.