Midiyala Hot News

Blogger news

Friday, November 22, 2013


பயன்படுத்திய வாகனங்களின் விலை உயர்வு

2014ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டத்தில் பயன்படுத்திய வாகனங்கள் மீது அறவிடப்படும் இறக்குமதி தீர்வை தொடர்பாக பெறுமதித் தீர்வை கணிக்கும் முறையை அரசாங்கம் மாற்றியுள்ளதால் நாட்டில் இறக்குமதியாகும் பயன்படுத்திய வாகனங்களின் விலை உயரவுள்ளன என வாகன இறக்குமதியாளர் சங்க தலைவர் மஹிந்த சரச்சந்திரா கூறினார்.

இதுவரையில் 6 மாதங்கள் பயன்படுத்திய வாகனங்களுக்கு 90 சதவீத வரியும், 6 மாதம் தொடக்கம் 1 வருடம் வரை பயன்படுத்திய வாகனங்களுக்கு 80 சதவீத வரியும் என பயன்படுத்திய காலத்துக்கு தக்க வரி விதிக்கப்பட்டு வந்தது.

புதிய நடைமுயின்படி இரு வருடத்திலும் குறைவாக பாவனைக் காலம் உள்ள எந்த ஒரு வாகனத்துக்கும் 90 சதவீத வரி அறவிடப்படும்.

இந்த வரி அதிகரிப்பால் சிறிய கார்கள் மற்றும் முச்சக்கர வண்டி என்பவற்றின் விலைகலில் 8 வீத அதிகரிப்பும் டீசல் வாகனங்களின் விலைகளில் 6 வீத அதிகரிப்பும்இ டபிள்காப் ரக வாகனங்களின் விலைகளில் 7 வீத அதிகரிப்பும் ஏற்படுமென சரச்சந்திரா கூறினார்.
 

No comments:

 

Follow On Facebook

F (Space) Msg1st Sent To 40404

Midiyala Background

Most Reading

Tags

Midiyala Hot News Presentetion. Powered by Blogger.