Midiyala Hot News

Blogger news

Friday, June 7, 2013

ஜித்தாவில் செயல்பட்டுவரும்இந்த மொபைல் பள்ளிவாசல், வார விடுமுறை நாட்களில் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளுக்கு நம்மைத் தேடி வருகிறது.

படத்தில் காணும் இந்த மொபைல் பள்ளிவாசல், ஜித்தாவில் உள்ள’கார்னிச் பீச்’ என்று அழைக்கப் படும், மக்கள் அதிகம் கூடும் கடல் கரைப் பகுதியில் கடந்த வாரம் வெள்ளிக் கிழமை அன்று எடுக்கப் பட்டதாகும்.

இந்தப் பள்ளி வாசலின் முக்கிய நோக்கம். அசர், மஃரிப், இஷா தொழுகைகளை சிலர் இதுபோன்ற பொழுது போக்கு பகுதிகளுக்கு செல்லும் போது வஃக்துக்கு தொழ இயலாமல் தொழுகையை இழக்க நேரிடும் அவ்வாறான சூழல்களில் இந்தப் பள்ளிவாசல் வஃக்துக்கு தொழுகையை நிறைவேற்ற உதவி புரிகின்றது.

RELEASED: G.C.E.A/L 2013 Exam Timetable

Friday, May 31, 2013

RELEASED: August 5 il Nadaipera Ulla G.C.E.A/L 2013 Pareetchaikana TimeTable Veliyaki Ullathu.

Download Seayya: http://www.doenets.lk/exam/docs/al2013/NEW-Syllabus-2013.pdf

Sunday, May 19, 2013


இலங்கையின் 2ஆவது அதிவேக நெடுஞ்சாலை...

கொழும்பு – கட்டுநாயக்காவுக்கு இடையிலான அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகள் 80 சதவீதமளவில் பூர்த்தியடைந்துள்ள நிலையில், இவ்வருடம் ஓகஸ்ட் மாதத்தில் இந்த நெடுஞ்சாலை பொதுமக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்படவுள்ளது. இந்த அதிவேக நெடுஞ்சாலை தொடர்பான தகவல்கள் பின்வரும் வரைகலையில் விபரிக்கப்பட்டுள்ளன.

Sunday, May 12, 2013

ஹலால் தொடர்பில் இறுதி அறிக்கை அமைச்சரவையில் சமர்ப்பிக்க தீர்மானம்.


(VI) ஹலால் சான்றிதழ் விநியோகம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்றக் குழு, விரைவில் இறுதி அறிக்கையொன்றை அமைச்சரவையில் சமர்ப்பிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தக் குழுவிற்கு முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க தலைமை தாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
 .
அமைச்சரவையில் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னதாக உறுப்பினர்கள் இது குறித்து கலந்தாலோசிக்க உள்ளதாக குழுவின் உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசீ தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், அறிக்கையின் உள்ளடக்கங்கள் பற்றி தெரியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 .
இறுதியாக கூடி ஆராய்ந்து இறுதி அறிக்கை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.


உகண்டாவுக்கு ஜனாதிபதி விஜயம்


நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நேற்றிரவு உகண்டாவுக்கு பயணமாகியுள்ளார்.

இந்த விஜயத்தின் போது உகண்டா ஜனாதிபதி யோவெரி முசெவெனியை சந்திக்கவுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கவுள்ளார்.


மின்கட்டண அதிகரிப்புக்கு எதிராக புதனன்று மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி

மின் கட்டண அதிகரிப்புக்கு எதிராக 150 தொழிற்சங்கள் மற்றும் 50 பொது அமைப்புக்கள் இணைந்து கொழும்பில் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை ஏற்பாடு செய்துள்ளன.

இது எதிர்வரும் 15ஆம் திகதி புதன்கிழமை நடைபெறவுள்ளது. கொழும்பு, கெம்பல்பிட்டி மைதானத்திலிருந்து கோட்டை புகையிரத நிலையம் வரை இந்த ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


பால் மாவின் விலை அதிகரிப்பு?

400 கிராம் பால்மா பைக்கற்றின் விலை 40 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக பால்மா உற்பத்தி நிறுவனங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பால் மாவின் விலை அதிகரிப்பு?

400 கிராம் பால்மா பைக்கற்றின் விலை 40 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக பால்மா உற்பத்தி நிறுவனங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலக சந்தையில் பால்மாவின் விலை அதிகரித்துள்ளமையும் டொலரின் பெறுமதிக்கேற்ப ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளமையுமே இந்த விலை அதிகரிப்புக்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

தற்போதைய சந்தைப் பெறுமதிக்கு பால்மாவை விநியோகிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதால் இது தொடர்பில் பால் மா உற்பத்தி நிறுவனங்கள், நுகர்வோர் அதிகார சபையுடன் பேச்சுவார்த்தை நடத்த தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கைக்கு பால்மாவை ஏற்றுமதி செய்யும் அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற பிரதான நாடுகள், ஒரு மெட்ரிக் தொன் பால் மாவின் விலையை 5000 டொலர்களால் அதிகரித்துள்ளன.

இந்நிலையில், பால் மா இறக்குமதிக்காக அறவிடப்படும் இறக்குமதி வரியையும் குறைக்குமாறு பால் மா உற்பத்தி நிறுவனங்கள், அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாப்பரசரருக்கு பணிவிடை செய்த ஒருவர் ஊடகங்களுக்கு வழங்கிய ஆச்சர்யம் மிக்க தகவல்கள்.

Sunday, May 5, 2013


16வது பாப்பரசர், ஆசிர்வதிப்பர் எனும் போப்-பெனடிக் இஸ்லாத்தைத் தழுவினாரா? அல்லது இது ஓர் பொய்யான செய்தியா என்பதில் இன்று உலகம் தடுமாறிக் கொண்டிருக்கின்றது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது பதவியைத் துறந்த போப் பெனடிக் அவர்களின் பின்னால் பல மர்மங்கள் மறைந்திருக்கின்றன.
பாப்பரசரருக்கு பணிவிடை செய்பவர்களுள் ஒருவர் ஆச்சர்யம் மிக்க தகவல்களை ஊடகங்களுக்கு வழங்கி இருக்கின்றார்.
அவற்றுள், கடந்த ஞாயிறு தினத்தன்று போப் அவர்கள் முஸ்லிம்கள் வணங்குவதற்கு தகுதியான திசையாக எடுக்கும் மக்கா திசையை நோக்கி எழுந்து நின்று வணக்கமொன்றை மேற்கொண்டதாகவும், அது ‘அஸ்ர்’ எனப்படும் முஸ்லிம்களின் ஐவேளைத் தொழுகைகளில் ஒன்றாக இருந்தது’ எனவும் கூறியிருந்தார்.
மேலும் 2006ல் இருந்து இஸ்லாமிய மறையான அல்குர்ஆனைப் படிப்பதில் போப் பெனடிக் அவர்கள் ஆர்வம் காட்டி வந்ததாகவும் கூறியிருந்தார்.
இச்செய்தியைக் கேட்டதும் மீடியாக்கள் அதிர்ச்சியடைந்தன. தங்களது ஒளி-ஒலிபரப்பு சாதனங்களை கீழேவைத்துவிட்டு, வத்திக்கான் வணக்கஸ்தலத்தின் ஊடகப் பிரிவில் போப் அவர்களைக் காண இருந்தவர்கள் வாயடைத்துப் போயினர். நம்ப முடியாமல் தங்களது அலுவலகங்களை நோக்கித் திரும்பினர்.
இதைவிட, ஆம்! போப் அவர்கள் சென் பீட்டர்ஸ் பஸிலிகா தேவாலயத்தின் பல்கனியில் 5 வேளையும் மக்காவை நோக்கி தொழுது வந்திருக்கின்றார் எனவும், அல் குர்ஆனை அவர் படித்து வந்தார் என்பதும் தற்பொழுது வத்திக்கான் சென் பீட்டர்ஸ் தேவாலயத்தின் போப் அவர்களின் அதி நம்பிக்கைக்குரியவர்களால் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
இதற்கிடையில் மேற்கத்தேய ஆங்கில ஊடகங்கள் இச் செய்தியை மிக இரகசியமாக பேணி கையாண்டு வருவதாகவும், இது பற்றிய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிய வருகிறது.
சில கிறிஸ்துவ ஆங்கில ஊடகங்கள் ‘பாப்பரசர் இஸ்லாத்தை தழுவியது எனும் செய்து வெறும் கட்டுக் கதையே’ என்பதாக ஊர்ஜிதப்படுத்தி வருகின்றன.
எப்படி இருந்த பொதிலும் ‘ முஸ்லிம்களுக்கு ஏற்படும் துன்பங்களின் போது முஹம்மது நபி அவர்களை மேற்கோள் காட்டி அமைதிப்படுத்தி வந்ததும், கடவுள் ஒருவர் இருந்தால் நிச்சயமாக அவர் ஒருவரே என்றும் அவர் அல்லாஹ்வைத் தவிர வேறு எவராகவும் இருக்க முடியாது’ எனவும் ஊடகத்திற்கு பகிரங்கமாக சென்ற ஞாயிற்றுக்கிழமை அறிவித்திருந்ததும் உலகறிந்த விடயமே!

அஸாத் சாலிக்கு 3 மாத தடுப்புக்காவல் உத்தரவு பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் கொழும்பு மாநகர சபையின் பிரதி மேயர் அஸாத் சாலிக்கு 3 மாத தடுப்புக்காவல் உத்தரவு பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.


இந்நிலையில் தற்.ேபாது குற்றப்புல்னாய்வுப்பிரிவினரின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அசாத் சாலி எதிர்வரும் 3 மாதங்களுக்கு குற்றப்புலனாய்வுப்பிரிவினரின் கட்டுப்பாட்டில் விசாரணை செய்யப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் புத்திக்க சிறிவர்த்தன தெரிவித்தார்
 

Follow On Facebook

F (Space) Msg1st Sent To 40404

Midiyala Background

Most Reading

Tags

Midiyala Hot News Presentetion. Powered by Blogger.