Midiyala Hot News

Blogger news

பிள்ளை இலங்கைக்கு உற்சாகத்தையும் கொடுத்து காலக்கெடுவையும் விதித்தார்!

Wednesday, September 25, 2013


2014 மார்ச் மாதமளவில் மனிதவுரிமை சம்பந்தமான பிரச்சினைகளை இலங்கை அரசாங்கம் தீர்க்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர் நவி பிள்ளை காலக்கெடு விதித்துள்ளார்.

அவ்வாறு செய்யத் தவறின், பன்னாட்டுச் சமூகம் தனது சொந்த விசாரணை முறையை நிறுவுவதற்கான கடப் பாட்டைக் கொண்டிருப்பதாக அவர் நம்பிக்கை தெரிவித் தார்.

இன்று (செப் 25) நடைபெற்ற ஐ.நா.வின் 24வது கூட்டத்தொடரில் உரையாற்றிய அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைச் சபையின் பிரதி உயர் ஆணையர் ஃபிளாவியா பென்சியரினால் முன்வைக்கப்பட்ட இலங்கை தொடர்பான அறிக்கையின் மீது கருத்து தெரிவித்த நவிபிள்ளை, மனித உரிமைச் சபை அக்கறை செலுத்தும் குற்றச்சாட்டுகளை சுயமாகவோ அல்லது நம்பிக்கை யான முறையிலோ புலனாய்வு செய்வதற்கு யாதேனும் புதிய அல்லது அனைத்தும் உள்ளடங்கிய முயற்சியைத் தன்னால் காண முடியவில்லை என்று தெரிவித்தார்.

குற்றமிழைத்த தனிநபர்களை வெற்றிகரமாக நீதியின் முன் நிறுத்துவது உள்ளிட்ட தெளிவான பெறுபேறுகளுடான நம்பத் தகுந்த தேசிய செயன்முறையில் ஈடுபடுவதற்கு இப்போதிருந்து 2014 மார்ச் வரைக்குமான காலப் பகுதியை இலங்கை அரசாங்கம் பயன்படுத்திக் கொள்ள அவர் உற்சாகம் அளித்தார். இலங்கை அரசாங்கம் அவ்வாறு செய்யத் தவறினால், பன்னாட்டுச் சமூகம் தனது சொந்த விசாரணை முறையை நிறுவுவதற்கான கடப்பாட்டைக் கொண்டிருப்பதாக அவர் நம்பிக்கை தெரிவித்தார்' என்று அந்த அறிக்கை கூறுகின்றது.

No comments:

 

Follow On Facebook

F (Space) Msg1st Sent To 40404

Midiyala Background

Most Reading

Tags

Midiyala Hot News Presentetion. Powered by Blogger.

Blog Archive