Saturday, November 23, 2013
Published on Sunday, 24 November 2013 12:28
පසුගිය පළාත් සභා මැතිවරණයේදී දයාසිරි
ජයසේකර සහ ජොන්ස්ටන් ප්රනාන්දු දෙපාර්ශ්වයන් අතර විශාල ලෙස ගැටුම් ඇවිල
ගිය අතර ඉන් පසුව ඔවුන් දෙදෙනා ප්රසිද්ධ වේදිකාවක එක්ව සිටීමට දක්නට
ලැබුනේ මෑතකදීය.
නිකවැරටිය ප්රදේශයේ පැවති උත්සව සභාවක්
අමතමින් ජොන්ස්ටන් ප්රනාන්දු ඇමතිවරයා වැඩිදුරටත් කියා සිටියේ, ඊළඟ
ජනාධිපතිවරණයේදී දයාසිරි ජයසේකර මහ ඇමතිතුමන් සමඟ එකට එක් වී ජනාධිපති
මහින්ද රාජපක්ෂ මහතාගේ ජයග්රහණය වෙනුවෙන් වැඩ කිරීමට සූදානම් බවයි.
උත්සවය සඳහා වයඹ මහ ඇමති දයාසිරි ජයසේකර මහතාද සහභාගී විය.
தொலைத்தொடர்பாடல் வரி அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மீதான வரி வரவு செலவுத்திட்டல் அதிகரிப்பு
வெள்ளிக்கிழமை, 22 நவம்பர் 2013 10:35
0 COMMENTS
ஆனாலும் இணையப் பாவனைக்கான வரி தொடர்ந்தும் 10 வீதமாகவே பேணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோலவே, கோதுமை மா, சீஸ், தயிர், மாஜரின், சோஸ் வகைகள், செசேஜ் வகை,
இனிப்பு வகைகள், சொக்லேட்கள், சீரியல் வகைகள், பஸ்டா, மோல்ட் மூலம்
தயாரிக்கப்பட்ட பியர், வினாகிரி, மரக்கறி, காளான், கடலை மற்றும் பழங்கள்,
பழரசம், நுளம்புச் சுருள், வெட்டப்பட்ட மலர்கள் மீதான செஸ் வரி
அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்ட போதிலும், அது குறித்த விபரங்கள்
வழங்கப்படவில்லை.
சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது
திங்கட்கிழமை, 18 நவம்பர் 2013 09:59
0 COMMENTS
24 வருடங்கள் சர்வதேசப் போட்டிகளில் பங்குபற்றி, நேற்று முன்தினம்
(சனிக்கிழமை) நிறைவுபெற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான போட்டியுடன்
சர்வதேசப் போட்டிகளிலிருந்து சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற்றார்.
இதன் பின்னர் அறிக்கையொன்றை வெளியிட்ட இந்தியாவின் பிரதமர் அலுவலகம்,
சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுவதாக அறிவித்தது.
சந்தேகமில்லாமல் சச்சின் டெண்டுல்கர் மிகச்சிறப்பான கிரிக்கெட் வீரர் எனக்
குறிப்பிட்ட பிரதமர் அலுவலகம், உலகம் முழுவதுமுள்ள மில்லியன்
கணக்கானவர்களை அவர் உத்வேகப்படுத்தியுள்ளதாகவும், அவர் ஒரு வாழும்
ஜாம்பவனான் எனவும் தெரிவித்தது.
16 வயதில் தனது அறிமுகத்தை மேற்கொண்டதிலிருந்து கடந்த 24 வருடங்களில் அவர்
உலகம் முழுதும் கிரிக்கெட் போட்டிகளில் பங்குபற்றியுள்ளதாகவும்,
இந்தியாவிற்காக ஏராளமான போட்டிகளை வென்றுள்ளதாகவும் தெரிவித்த பிரதமர்
அலுவலகம், உலகில் இந்தியாவின் விளையாட்டுக்களுக்கான சிறப்பான தூதுவராக அவர்
செயற்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
சச்சின் டெண்டுல்கரால் ஏற்படுத்தப்பட்டுள்ள சாதனைகள் ஒப்பிட முடியாதன எனக்
குறிப்பிட்டுள்ள பிரதமர் அலுவலகம், விளையாட்டில் அவரது சிறப்பான
நடவடிக்கைகளுக்காக அவருக்கு ஏராளமான விருதுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும்
தெரிவித்துள்ளது.
பாரத ரத்னா விருதைப் பெறும் முதலாவது விளையாட்டு வீரராகவும், இளையவராகவும் சச்சின் டெண்டுல்கர் மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Views: 501 |
0 0 0 |
தங்க இறக்குமதி தீர்வை குறைப்பு
Published on Sat Nov - 2013 48 Views
ஜனாதிபதி தனது வரவு – செலவுத் திட்டத்தில்
தங்கத்தின் இறக்குமதி தீர்வை மீது விதிக்கப்பட்டிருந்த 100 சதவீத மேலதிக
அறவீடு அகற்றப்படும் என அறிவித்தார்.
தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி கண்டதை
தொடர்ந்து தங்கம் மீதான 10 சதவீத இறக்குமதி தீர்வை மீது 100 சதவீத மேலதிக
அறவீடு விதிக்கப்பட்டது.
Friday, November 22, 2013
பயன்படுத்திய வாகனங்களின் விலை உயர்வு
வெள்ளிக்கிழமை, 22 நவம்பர் 2013 17:58
0 COMMENTS
இதுவரையில் 6 மாதங்கள் பயன்படுத்திய வாகனங்களுக்கு 90 சதவீத வரியும், 6 மாதம் தொடக்கம் 1 வருடம் வரை பயன்படுத்திய வாகனங்களுக்கு 80 சதவீத வரியும் என பயன்படுத்திய காலத்துக்கு தக்க வரி விதிக்கப்பட்டு வந்தது.
புதிய நடைமுயின்படி இரு வருடத்திலும் குறைவாக பாவனைக் காலம் உள்ள எந்த ஒரு வாகனத்துக்கும் 90 சதவீத வரி அறவிடப்படும்.
இந்த வரி அதிகரிப்பால் சிறிய கார்கள் மற்றும் முச்சக்கர வண்டி என்பவற்றின் விலைகலில் 8 வீத அதிகரிப்பும் டீசல் வாகனங்களின் விலைகளில் 6 வீத அதிகரிப்பும்இ டபிள்காப் ரக வாகனங்களின் விலைகளில் 7 வீத அதிகரிப்பும் ஏற்படுமென சரச்சந்திரா கூறினார்.
அதிசயம் ஆனால் உண்மை: தூக்கிட்டும் உயிர்பிழைத்த ஈரான் கைதி... மீண்டும் தூக்கிலிட அரசு முடிவு
Wednesday, October 16, 2013
டெஹ்ரான்: தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்ட கைதி, மீண்டும் உயிர் பெற்றதால் குழப்பமைடைந்த ஈரான் அரசு, அக்கைதியை மீண்டும் தூக்கிலிட முடிவு செய்துள்ளது. ஆனால், இதற்கு மனித உரிமை அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. போதைப் பொருள் கடத்திய வழக்கில் கைதாகிய அலிரெசா(37) என்ற குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை, கடந்த வாரம் புதன்கிழமை அதிகாலையில் போஜ்னர்ட் சிறை வளாகத்தில் நிறைவேற்றப் பட்டது. கிட்டத்தட்ட 12 நிமிடப் போராட்டத்திற்குப் பிறகு, அடங்கிப்போன அலிரெசாவின் உடலை பரிசோதித்த சிறை மருத்துவர்கள் அவரது உயிர் பிரிந்து விட்டதாக அறிவித்தனர். பின்னர், சவக்கிடங்குக்கு அனுப்பப்பட்ட அந்த உடலை அவரது உறவினர்களிடம் ஒப்படைப்பதற்காக மூட்டை கட்டும் பணி நடந்தது. அப்போது, அலிரெசாவின் உடலில் அசைவு இருப்பதாக சந்தேகித்த சவக்கிடங்கு ஊழியர்கள், உடனடியாக அத்தகவலை மருத்துவர்களுக்குத் தெரிவித்தனர். உடனடியாக போஜ்னர்ட் இமாம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அலிரெசாவைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் உயிரோடு இருப்பதாக ஆச்சர்யம் தெரிவித்தனர். மரணித்து விட்டார் எனக் கருதப்பட்ட அலிரெசா, தற்போது நலமாக உள்ளதை அறிந்த உறவினர்கள் ஆனந்தத்தில் திளைத்தனர். ஆனால், தகவலறிந்து மருத்துவமனைக்கு விரைந்து வந்த போலீசார் மீண்டும், அலிரெசாவைக் கைது செய்தனர். அவர் முழுமையாக குணமடைந்த பிறகு மீண்டும் தூக்கிலிட்டு கொல்ல ஈரான் அரசு திட்டமிட்டுள்ளது. சர்வதேச சட்டங்களின்படி, மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட ஒரு நபர் உயிர் பிழைத்து விட்டால் அவரது குற்றத்தை மன்னித்து விடுதலை செய்து விடுவது தான் மரபு. இதற்காகவே மரண தண்டனை கைதிகளின் உடல்நிலை, தூக்கிலிடும் கயிறு உள்பட பல்வேறு அம்சங்கள் ஒன்றிற்கு இருமுறை சிறை அதிகாரிகளால் தீவிரமாக பரிசோதிக்கப்படுகிறது. ஆனால், அலிரெசாவுக்கு மரண தண்டனை விதித்த நீதிபதி, 'அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவர் மரணத்தில் இருந்து தப்பிவிட்டாலும் மீண்டும் அந்த தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும்' எனக் கூறியுள்ளார். அலிரெசாவை மீண்டும் தூக்கிலிடும் முடிவுக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள மனித உரிமை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கடந்த ஆகஸ்ட்டில் ஈரானின் புதிய அதிபராக ரவுகானி பதவியேற்றதிலிருந்து இதுவரை 125 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உழ்ஹிய்யா வழிகாட்டல் - 2013
Wednesday, October 9, 2013
ஹஜ்ஜுப் பெருநாள் தினங்களில் உழ்ஹிய்யா கொடுப்பது தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டிய சில அறிவுறுத்தல்கள்!
தற்போதைய நாட்டின் சூழ்நிலையில் சகவாழ்வையும், சமூக நல்லிணக்கத்தையும் கருத்திற்கொண்டு எமது அனைத்து விடயங்களிலும் நிதானமாகவும், கவனமாகவும் நடந்து கொள்ள வேண்டும். அதேபோல அரச சட்ட-விதி முறைகளுக்கமை அனைத்து விடயங்களையும் முன்னெடுப்பது ஒரு முக்கிய அம்சமாகக் கருதப்பட வேண்டியுள்ளது.
அந்த வகையில் இம்முறை உழ்ஹிய்யாவின்போது பின்வரும் ஆலோசனைகளை கவனத்தில் கொள்ளுமாறு பணிவுடன் வேண்டுகிறோம்.
- உழ்ஹிய்யா என்பது அதனை நிறைவேற்ற வசதியுள்ளவர்கள் செய்யும் ஓர் உயர்வான சுன்னா முஅக்கதாவாகும்
-
எமது நாட்டைப் பொறுத்தவரை ஆடு, மாடு ஆகியவற்றை உழ்ஹிய்யாவுக்காகப் பயன்படுத்த முடியும். எனினும் பௌத்த, இந்து மக்களிடையே மாடு அறுப்பதற்கு எதிரான கருத்து வலுப்பெற்றிருப்பதால், முடியுமானவரை உழ்ஹிய்யாவுக்காக ஆடுகளை பயன்படுத்துவது விரும்பத்தக்கதாகும்.
-
அனைத்து சந்தர்ப்பங்களிலும் மிருகங்களை ஜீவகாருண்யத்துடன் நடத்தல் வேண்டும். அவற்றைக் கட்டி வைக்கும்போது உரிய இடைவெளி விடுவதுடன், அவற்றிற்கான நீர் மற்றும் தீனியை முறையாக வழங்குவது அவசியமாகும்.
-
விலங்குகளை வாகனங்களில் எடுத்துச் செல்லும்போது (Transportation) பின்வரும் விடயங்கள் கவனத்தில் எடுக்கப்பட வேண்டியுள்ளது;
-
ஆடு/மாடுகளை வாங்கும் போது கிராம உத்தியோகத்தரினால்(GS) மிருகத்தின் உரிமை அத்தாத்சிப்படுத்தப்படல் வேண்டும்.
- அதனையடுத்து மிருக வைத்தியரின் (Veterinary Surgeon) மிருகத்தின் உரிமைக்கான சான்றிதழ், மாட்டு விபர சீட்டு (Cattle Voucher),சுகாதார அத்தாட்சிப் பத்திரம் (Health Certificate) என்பவற்றைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இதற்கு ஒரு மாட்டிற்கு 50 ரூபா செலுத்த வேண்டும்.
- மிருகங்களை எடுத்துச் செல்வதற்கான அனுமதியை (Transport Permit) பிரதேச செயலகத்தில் (DS Office) பெற்றுக் கொள்ள வேண்டும். இதற்கு ஒரு மாட்டிற்கு 50 ரூபா செலுத்த வேண்டும்.
- மேற்குறிப்பிட்ட சான்றிதழ்கள் மற்றும் அனுமதிப்பத்திரங்களை விலங்குகளின் உரிமையாளரை முதன்மைப்படுத்தி அவர் மூலம் பெற்றுக்கொள்வது மிகப் பொருத்தமானதாகும்.
- மிருகங்களை எடுத்துச் செல்வதற்குப் பொருத்தமான வாகனத்தைப் பயன்படுத்த வேண்டும். அரசாங்க வர்த்தமானியின் படி விலங்குகளை வாகனத்தில் ஏற்றிச்செல்ல அனுமதிக்கப்பட்ட அளவு:
-
(இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு வர்த்தமானிப் பத்திரிகை (அதி விசேஷட) இல. 1629/17 -2009.11.26)
-
குர்பான் செய்வதற்குப் பொருத்தமான இடம், நேரம் என்பவற்றை முன்கூட்டியே தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.
-
குறிப்பாக பிற சமயத்தவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் உழ்ஹிய்யா செய்யப்படும் இடம் மறைவானதாக இருப்பது மிகவும் அவசியமாகும்.
-
-
உங்களின் பிரதேச உள்ளூராட்சி மன்ற (மாநகர/ நகர/ பிரதேச சபை) மிருக வைத்தியரை சந்தித்து குர்பானிக்கான உரிய அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
-
மிருக வைத்தியர்/ உள்ளூராட்சி சபையின் உரிய அதிகாரியினால் உழ்ஹிய்யா செய்யும் இடத்தைப் பார்வையிட உரிமை உண்டு. ஒரு மிருகத்தை குர்பானி செய்யும் போது ஏனைய மிருகங்கள் காணாமலும், உணர முடியாமலும் வைத்திருப்பது அவசியமாகும்.
-
குர்பானி செய்யும் முன் கத்தியை நன்கு கூர்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். குர்பான் செய்யாப்பட்ட பின் விலங்குகளின் கழிவுகளை (எலும்பு, கால், இரத்தம்,சாணம், தோல்) உரிய முறையில் ஆழத்தில் புதைப்பது மிகவும் அவசியமாகும்.
-
குர்பான் பங்கீட்டின்போது ஒழுங்கு முறைப்படியும், சாணக்கியமாகவும் நடந்து கொள்ள வேண்டும். போயா தினங்களில் உழ்ஹிய்யா கொடுப்பதையும், பங்கிடுவதையும், வாகனங்களில் வெளியூர்களுக்கு அனுப்புவதையும் முற்றாகத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
-
ஜீவகாருண்யத்தை பற்றியும் அயலவர்களைத் துன்புறுத்துவதைத் தவிர்க்குமாறும் பல ஹதீஸ்கள் வந்துள்ளன. உழ்ஹிய்யா கொடுக்கும் போது அவற்றை கருத்திற்கொள்ளுமாறு ஞாபகப்படுத்துகிறோம்.
இந்த அறிவித்தல் அனைத்து மஸ்ஜித்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இதனை ஜும்ஆ தொழுகையின் பின்னர் வாசித்து பொது மக்களுக்கு தெளிவுபடுத்துவதுடன் உங்களது பள்ளிவாசல் அறிவித்தல் பலகையில் பிரசுரிக்குமாறும் மஸ்ஜித் நிருவாகிகள் வேண்டிக்கொள்ளப்பட்டுள்ளனர்.
எமது நாட்டைப் பொறுத்தவரை ஆடு, மாடு ஆகியவற்றை உழ்ஹிய்யாவுக்காகப் பயன்படுத்த முடியும். எனினும் பௌத்த, இந்து மக்களிடையே மாடு அறுப்பதற்கு எதிரான கருத்து வலுப்பெற்றிருப்பதால், முடியுமானவரை உழ்ஹிய்யாவுக்காக ஆடுகளை பயன்படுத்துவது விரும்பத்தக்கதாகும்.
அனைத்து சந்தர்ப்பங்களிலும் மிருகங்களை ஜீவகாருண்யத்துடன் நடத்தல் வேண்டும். அவற்றைக் கட்டி வைக்கும்போது உரிய இடைவெளி விடுவதுடன், அவற்றிற்கான நீர் மற்றும் தீனியை முறையாக வழங்குவது அவசியமாகும்.
விலங்குகளை வாகனங்களில் எடுத்துச் செல்லும்போது (Transportation) பின்வரும் விடயங்கள் கவனத்தில் எடுக்கப்பட வேண்டியுள்ளது;
- ஆடு/மாடுகளை வாங்கும் போது கிராம உத்தியோகத்தரினால்(GS) மிருகத்தின் உரிமை அத்தாத்சிப்படுத்தப்படல் வேண்டும்.
- அதனையடுத்து மிருக வைத்தியரின் (Veterinary Surgeon) மிருகத்தின் உரிமைக்கான சான்றிதழ், மாட்டு விபர சீட்டு (Cattle Voucher),சுகாதார அத்தாட்சிப் பத்திரம் (Health Certificate) என்பவற்றைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இதற்கு ஒரு மாட்டிற்கு 50 ரூபா செலுத்த வேண்டும்.
- மிருகங்களை எடுத்துச் செல்வதற்கான அனுமதியை (Transport Permit) பிரதேச செயலகத்தில் (DS Office) பெற்றுக் கொள்ள வேண்டும். இதற்கு ஒரு மாட்டிற்கு 50 ரூபா செலுத்த வேண்டும்.
- மேற்குறிப்பிட்ட சான்றிதழ்கள் மற்றும் அனுமதிப்பத்திரங்களை விலங்குகளின் உரிமையாளரை முதன்மைப்படுத்தி அவர் மூலம் பெற்றுக்கொள்வது மிகப் பொருத்தமானதாகும்.
- மிருகங்களை எடுத்துச் செல்வதற்குப் பொருத்தமான வாகனத்தைப் பயன்படுத்த வேண்டும். அரசாங்க வர்த்தமானியின் படி விலங்குகளை வாகனத்தில் ஏற்றிச்செல்ல அனுமதிக்கப்பட்ட அளவு:
(இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு வர்த்தமானிப் பத்திரிகை (அதி விசேஷட) இல. 1629/17 -2009.11.26)
குர்பான் செய்வதற்குப் பொருத்தமான இடம், நேரம் என்பவற்றை முன்கூட்டியே தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.
குறிப்பாக பிற சமயத்தவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் உழ்ஹிய்யா செய்யப்படும் இடம் மறைவானதாக இருப்பது மிகவும் அவசியமாகும்.
உங்களின் பிரதேச உள்ளூராட்சி மன்ற (மாநகர/ நகர/ பிரதேச சபை) மிருக வைத்தியரை சந்தித்து குர்பானிக்கான உரிய அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
மிருக வைத்தியர்/ உள்ளூராட்சி சபையின் உரிய அதிகாரியினால் உழ்ஹிய்யா செய்யும் இடத்தைப் பார்வையிட உரிமை உண்டு. ஒரு மிருகத்தை குர்பானி செய்யும் போது ஏனைய மிருகங்கள் காணாமலும், உணர முடியாமலும் வைத்திருப்பது அவசியமாகும்.
குர்பானி செய்யும் முன் கத்தியை நன்கு கூர்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். குர்பான் செய்யாப்பட்ட பின் விலங்குகளின் கழிவுகளை (எலும்பு, கால், இரத்தம்,சாணம், தோல்) உரிய முறையில் ஆழத்தில் புதைப்பது மிகவும் அவசியமாகும்.
குர்பான் பங்கீட்டின்போது ஒழுங்கு முறைப்படியும், சாணக்கியமாகவும் நடந்து கொள்ள வேண்டும். போயா தினங்களில் உழ்ஹிய்யா கொடுப்பதையும், பங்கிடுவதையும், வாகனங்களில் வெளியூர்களுக்கு அனுப்புவதையும் முற்றாகத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
ஜீவகாருண்யத்தை பற்றியும் அயலவர்களைத் துன்புறுத்துவதைத் தவிர்க்குமாறும் பல ஹதீஸ்கள் வந்துள்ளன. உழ்ஹிய்யா கொடுக்கும் போது அவற்றை கருத்திற்கொள்ளுமாறு ஞாபகப்படுத்துகிறோம்.
உலக நகைச்சுவை நாயகர் மிஸ்டர் பீண் இஸ்லாத்தை தழுவினார்……!!
Monday, October 7, 2013
Oct042013
சத்தியத்தை தமது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டுள்ள இந்த சகோதரருக்கு இறைவன் மறுமையிலும் இம்மையிலும் நல் வாழ்வை ஏற்படுத்துவானாக…
மடிகே மிதியாலை மத்திய கல்லூரியிலிருந்து தோற்றிய 05 மாணவர்கள் சித்தி
Tuesday, October 1, 2013
ஓக்டோபர் 01 ல் வெளியான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கு குருநாகல் மாவட்டம், வாரி/ மடிகே மிதியாலை மத்திய கல்லூரியிலிருந்து தோற்றிய 5 மாணவர்கள் சித்தி பெற்றுள்ளதாக அறியக்கிடைத்துள்ளது.
முன்ஷிதா முனாப்டீன் = 178
முனீப் முஹைஸ்தீன் = 166
பாஹிர் அ. ஸலாம் = 163
தஸ்னீஹா தாசிம் = 161
ஆசீர் கபீர் = 156
ஆகியோரே சிதியடைந்தவர்களாவர்.
இச்சந்தர்ப்பத்தில் பெற்றோர்களும், ஊர் நலன் விரும்பிகளும்
அப்பாடசாலை அதிபர் HM அன்வர்தீன் மற்றும் ஏனைய
ஆசிரியர்களுக்கும் தமது நன்றியையும் பாராட்டுக்களையும
தெரிவித்துக் கொள்கிறார்கள்.
எம்முடைய பாராட்டுக்களும் இவர்களுக்கு உரித்தாகட்டும்.
எதிர்காலத்தில் இன்னும் சிறந்த பெறுபேறுகளைப் பெறவும்
இறைவனை வேண்டிக் கொள்வோம்.

Subscribe to:
Posts (Atom)