Midiyala Hot News

Blogger news

சி.வி.விக்கினேஸ்வரன் எனக்கும் தூரத்துச் சொந்தம்” ஜனாதிபதி மகிந்த

Monday, September 23, 2013

இலங்கை வடக்கு மாகாணத்தில் தேர்தல் முடிந்து, தமிழ் தேசியக் கூட்டமைப்பு மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ளது. அக் கூட்டணியின் பிரதான வேட்பாளர் சி.வி.விக்கினேஸ்வரன், வடக்கு மாகாணத்தின் முதல்வராக போகிறார். 
தமிழ் தேசியக் கூட்டமைப்பு இதுவரை மக்களுக்கு காட்டிய அரசியல்வாதிகளில் இருந்து விக்னேஸ்வரன் வித்தியாசமாக இருப்பது, கூட்டமைப்பு இதுவரை செய்துவந்த அரசியலில் இருந்து வேறுபட்டு இருக்கப்போகிறது. அதை இதுவரை காலமும் தமிழ் தேசிய அரசியலுக்கு பழக்கப்பட்டவர்களால் சகித்துக்கொள்ள முடியுமா என்று தெரியவில்லை. சகித்துக்கொள்வது நல்லது.
யாழ்ப்பாணத்தில் போட்டியிட்டு ஜெயித்துள்ள விக்னேஸ்வரன், யாழ்ப்பாணத்தில் பிறந்தவரல்ல. கொழும்பு ஹல்ஸ்ட்ரோஃப்பில் பிறந்தவர். தனது வாழ்வின் முதல் 9 ஆண்டுகளையும், சிங்கள பகுதியான குருணாகலவில் வசித்தவர். அதன்பின், வசித்தது, மற்றொரு சிங்கள நகரமான அனுராதபுர. கல்வி கற்றது, கொழும்பு ராயல் கல்லூரி. தேர்தலுக்கு முன்புவரை கொழும்புவில் முழுமையான சிங்கள வி.ஐ.பி.களுடனும், அரசியல் தலைவர்களுடனும் மிங்கிள் பண்ணி வாழ்ந்தவர்.
2009-ம் ஆண்டு விடுதலைப் புலிகளை யுத்தத்தில் அழித்ததற்காக இலங்கை அரசு நடத்திய வெற்றி விழா கொண்டாட்டங்களில் அரசு வி.ஐ.பி.களுடன் கலந்து கொண்டவர், விக்கினேஸ்வரன்.
“புலிகளை அழித்ததை வெற்றி விழாவாக கொண்டாடுகிறார்களே” என தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்கள் வெளிநாட்டு தமிழர்களின் மேடைகளில் கண்கள் சிவக்க முழங்கிக் கொண்டிருந்த நேரத்தில், விக்கினேஸ்வரன் அரசியலுக்கே வரவில்லை. அப்போது ‘கண் சிவந்த’ தமிழ் எம்.பி.க்கள் இப்போது விக்கினேஸ்வரனுக்கு ‘மண் சிவக்க’ சிவப்பு கம்பள வரவேற்பு கொடுப்பதில் பிசி.

விக்கினேஸ்வரனின் இரு மகன்களும் திருமணம் செய்திருப்பது, இரு சிங்கள பெண்களை. ஒரு மருமகள், இலங்கை அரசின் தற்போதைய அமைச்சர், வாசுதேவ நாணயக்காரவின் மகள். மற்றைய மருமகள், முன்னாள் எம்.பி. கேசரலால் குணசேகரவின் சகோதரர் மகள். இருவரும் பாரம்பரிய சிங்கள குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள்.
வடக்கு மாகாண தேர்தல் முடிவு பற்றி, இலங்கை ஜனாதிபதி மகிந்த  என்ன சொல்கிறார்?
“வடக்கில் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது எனக்கு ஏற்கனவே தெரியும். வடக்கில் முதலமைச்சராக விக்னேஸ்வரன் வருவது பற்றி நான் மகிழ்ச்சியடைகிறேன். காரணம், என்னதான் தமிழராக இருந்தாலும் அவர், தென் பகுதியில் சிங்களர்களுடன் ஒன்றாக, ஒரே குடும்பமாக வாழ்ந்து வருபவர்.
வடக்கு மாகாணத்தை ஆட்சி செய்ய போகிற அவர், எனது அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மற்றும் கேசரலால் குணசேகர ஆகியோரின் உறவினர். ஒரு விதத்தில், எனக்கும் அவர் தூரத்துச் சொந்தம்” என்கிறார், ஜனாதிபதி ராஜபக்ஷே

வடமேல் மாகாண முதலமைச்சர் தயாசிறி ஜயசேகர


வடமேல் மாகாண முதலமைச்சர் ?தயாசிறி ஜயசேகர முன்னிலையில்


வடமேல் மாகாணசபையில் விருப்பு வாக்குகளின்படி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் தயாசிறி ஜயசேகர முன்னிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு கட்சி மாறிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தானே வடமேல் மாகாண சபையின் முதலமைச்சர் என சவால் விடுத்தார். இந்நிலையில் வடக்கைப் போலவே இம்முறை இடம்பெற்ற வடமேல் மாகாண சபை தேர்தலும் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. 
ஐக்கிய தேசியக் கட்சியை விட்டு எங்கும் போக மாட்டேன் என கூறிக் கொண்டிருந்த தயாசிறியின் கட்சி தாவலும், அவரது சூளுரைகளும் அதற்கான காரணமாக அமைந்தன. 
இந்நிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்ட தயாசிறி ஜயசேகர விருப்பு வாக்குகளின் படி முன்னிலையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவின் மகனான ஜொஹான் பெர்ணான்டோவிற்கும் தயாசிறி ஜயசேகரவிற்கும் இடையில் போட்டிநிலை ஏற்பட்டது. 
இந்நிலையில் தயாசிறி ஜயசேகர முதன்னிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

பிரச்சினை எங்கே இருக்கிறது.......?

Sunday, September 15, 2013


இம்முறை வடமேல்,மத்திய,வட மாகாண சபை தேர்தலில் எமது முஸ்லிம் பிரதிநிதிகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்று எல்லோரும் மேடை போட்டு பேசுகின்றனர்........ என்றாலும் எந்த ஒரு அரசியல் கட்சியின் மேடையிலும் நீங்கள் எல்லோரும் கட்டாயம் வாக்களிக்க செல்லுங்கள் என்று கூறவில்லை.

ஏன் ?

உதாரணமாக சென்ற வடமேல் மாகாண சபை குருணாகல் மாவட்டத்தில் அழிக்கப்பட்ட மொத்த முஸ்லிம் வாக்குகளை பார்த்தால்....

மொத்த முஸ்லிம் வாக்குகள் சுமார் 100000

ஐக்கிய தேசிய கட்சி + முஸ்லிம் காங்கிரஸ் கூட்டணி வாக்குகள் 25000(பெறப்பட்ட முஸ்லிம் பிரதிநிதிகள் 4 )ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வாக்குகள் 14500(பெறப்பட்ட முஸ்லிம் பிரதிநிதிகள் 1 )ஏனைய கட்சிகளுக்கு 500 அழிக்கப்பட்ட மொத்த முஸ்லிம் வாக்குகள் வெறும் 40000
ஏனைய 60000 முஸ்லிம் வாக்குகளிலும் வெளிநாட்டில் உள்ளவர்கள் மற்றும் மரணித்தவர்கள் என்று 20000 வாக்குகளை வைத்து விட்டு பார்த்தால் எஞ்சியுள்ள 40000 (அவர்களும் வாக்களித்து இருந்தால் குருணாகல் மாவட்டத்தில் எமது முஸ்லிம் பிரதிநிதிகள் எண்ணிக்கை இன்னும் மூன்று அதிகரித்திருக்கும்) வாக்களர்களும் எங்கே போனார்கள் ?????

யார் வென்றாலும் எமக்கு பிரயோஜனம் இல்லை என வீடுகளில் ஒதுங்கிக் கொண்டார்களா ??

இல்லை அந்தந்த கட்சிக்காரர்கள் பார்த்துக்கொள்ளட்டும் என்று விலகிப்போனார்கலா ??

இல்லை அல்லாஹ் தருவான் என்று சுருங்கி போனார்களா ?

தீர்வை அரசியல் வாதிகள் தேடவுமில்லை.....

மக்கள் கவனிக்கவும் இல்லை.....

ஆனால்... பள்ளிகள் உடைக்கப்படுவது பற்றி அங்கலாய்க்கின்றோம்.
உரிமைகள் மிதிக்கப்படுகிறது என்று ஓலமிடுகின்றோம்.
முஸ்லிம்கள் தீவிரவாதிகள் என்பதாக பகிரங்கமாக சொல்வதாக கர்ஜிக்கின்ன்றோம்.
இஸ்லாமிய சரிஆ காட்டு மிராண்டி தரமான சட்டம் என்று கூறுபவர்களை கடிந்து கொள்கின்றோம்.
இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கம் என்று சொன்னவர்களை சாபாம் இடுகின்றோம். 
பிரச்சினை எங்கு இருக்கிறது என்று யாரும் பார்ப்பதில்லை.

வாக்காளர்கள் வீட்டிலே தூங்கிவிட்டு எங்களுக்காக பேச யாரும் இல்லையே என்று அரசியல்வாதிகளை திட்டி தீர்ப்பதில் பிரயோஜனமில்லை.
இந்த நிலமை மாறவேண்டும்,எமது முஸ்லிம் வாக்குகளின் பெறுமதியை முழு நாட்டுக்கும் சர்வதேஷத்துக்கும் காட்டவேண்டும்...
இதற்கான ஒரே வழி நமது முஸ்லிம் வாக்குகள் அனைத்தும் இயக்க வேறுபாடுகள் மறந்து போடப்பாடல் வேண்டும்.
அது எந்த கட்சி இன் எந்த அபேட்சகருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது உங்கள் விருப்பம்.
ஆனால் அந்த அபேட்சகர் நிச்சயம் ஒரு முஸ்லிம் பிரதிநிதியாக இருக்க வேண்டும்,அதிலும் சமூகத்தின் குரலாக என்றும் ஒலிக்க வேண்டும்.
அதற்காக எங்கள் வாக்குகள் அனைத்தும் முழுமையாக பயன்படுத்தப்படல் வேண்டும்.
எனவே இது சம்பந்தமான அறிவுறுத்தல்கள் பள்ளிவாசல் ஊடாகவும்,மிம்பர் மேடைகள் ஊடாகவும் சமூகத்திற்கு வழங்கப்படல் வேண்டும்.இது ஒரு சமூகத்தின் கூட்டு பொறுப்பு.

எனவே வருகின்ற 21 ஆம் திகதி முஸ்லிம்கள் அனைவரும் எமது உரிமைக்காக எமது வாக்குகள் அனைத்தையும் வாக்களிப்பு நிலையத்திற்கு சென்று பயன்படுத்துவோம்.

அன்றைய தினம் எமது வேலைகளை சமூகத்தின் நன்மைக்காக சிறிது சுருக்கிக் கொள்வோம்.
எல்லாவற்றிற்கும் அல்லாஹ் போதுமானவன்.

(எந்த சமூகம் தங்களை தாங்களே மாற்றிக்கொள்ளவில்லையோ அந்த சமூகத்தை அல்லாஹ் மாற்ற மாட்டான்)

5 வயதில் தனியாக விமானம் ஓட்டி பரபரப்பை ஏற்படுத்திய சிறுவன்!

Thursday, September 5, 2013


சீன தலைநகர் பீஜிங்கில் உள்ள உயிரியல் பூங்காவின் மீது தொடர்ந்து 35 நிமிடங்கள் தனியாக விமானம் ஓட்டிய சிறுவன், அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தினான்.
கிழக்கு சீனாவில் உள்ள ஜியாங்சு மாகாணத்தை சேர்ந்தவர் ஹி லிஷெங். தன்னுடைய 5 வயது மகனை எதற்கும் அஞ்சாத சாகசக்காரனாக உருவாக்க வேண்டும் என்பதில் இவருக்கு தனியாத ஆர்வம்.
இந்த ஆர்வம் அவருக்குள் வெறியாக உருவெடுக்க தொடங்கியது. கடந்த பிப்ரவரி மாதம், நியூயார்க் நகரின் மைனஸ் 13 செல்சியஸ் உறைபனியில் தனது 5 வயது மகன் டுவோடுவோ-வை வெறும் ஜட்டியுடன் அமர வைத்ததன் மூலம் இவரும் இவரது மகனும் பிரபலமடைந்தனர்.
இந்நிலையில், இவருக்கு சொந்தமான சிறிய ரக விமானத்தில் டுவோடுவோ-வை மட்டும் தனியாக அமர்த்தி பீஜிங்கில் உள்ள உயிரியல் பூங்காவின் மீது அவன் விமானத்தை செலுத்தி வட்டமிட்டு பறக்கும் சாகசத்தை கண்டு ஹி லிஷெங் பரவசமடைந்துள்ளார்.
அந்த விமானம் தரையிறங்கியதும், இவ்வளவு நேரம் தங்களின் தலைக்கு மேலே வட்டமிட்ட விமானத்தை ஓட்டியவன் 5 வயது சிறுவன் என்பதை அறிந்த பொதுமக்கள் பதற்றமும், பரபரப்பும் அடைந்தனர்.
விமானம் ஓட்டுவதற்கு, போதுமான பயிற்சியும், லைசென்சும் தேவை என்ற விதிமுறைகளை மீறி 5 வயது சிறுவனை விமானம் ஓட்ட வைத்த ஹி லிஷெங் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து போலீசார் ஆலோசித்து வருகின்றனர்.

Sep 03 Madige Midiyalayil Nadaipetra Pothujana Munnaniyin Maaperum Koottam Mr.Namal Rajapakse MP Kalandu Sirappiththar.

Tuesday, September 3, 2013


Sep 03 Madige Midiyalayil Nadaipetra
Pothujana Munnaniyin Maaperum Koottam. Mr.Namal Rajapakse MP, Mr.Abdul Saththar Matrum Palar
Inda Koottaththil Kalandu Kondanar..








15 நிமிடத்தில் லேப்டாப்பை கழற்றி மாட்டி சாதனை படைத்த 8 வயது சிறுமி!

Thursday, August 22, 2013


athrshini_laptop
கோவை மாவட்டத்தில் நான்காம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவர் 15 நிமிடத்தில் மடிக்கணினியை கழற்றி மாட்டி சாதனை படைத்துள்ளார்.
கோவை சாய்பாபா காலனியை சேர்ந்த பிரபு மகாலிங்கம் என்பவர் கணினி சேல்ஸ் அண்ட் சர்வீஸ் கடை வைத்துள்ளார். இவரது மகள் ஆதர்ஷினி(8) இவர் கோவில்பாளையம் அருகே உள்ள தேவம்பாளையம் இந்தியன் பப்ளிக் பள்ளியில் 4ம் வகுப்பு படிக்கிறாள்.
கோடை விடுமுறையில் அப்பாவின் கடைக்கு சென்றிருந்த ஆதர்ஷினி கணினியை பிரித்து அப்பா சர்வீஸ் செய்வதை உன்னிப்பாக பார்த்தாள். மகளின் ஆர்வத்தை கவனித்த பிரபுமகாலிங்கம் அவருக்கு தொடர்ந்து 15 நாட்கள் கணினியை கழற்றி மாற்றுவது குறித்து பயிற்சி அளித்தார்.
அதன் பின்பு கடையில் இருந்த மடிக்கணினியை சிறுமி தானே கழற்றி மாட்டி அசத்தினாள். மாணவியின் திறமையை கண்டு பள்ளி ஆசிரியர்களும் பாராட்டி உற்சாகப்படுத்தினர்.
இந்நிலையில் அரியானா இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்துக்கு ஆதர்ஷினி பெயரை பள்ளி நிர்வாகம் பரிந்துரை செய்தது. இதனைத் தொடர்ந்து இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவன பொறுப்பாளர் விவேக்ராஜா, சிறுமியின் தாத்தாவும் முன்னாள் துணை மாவட்ட ஆட்சியருமான மகாலிங்கம் ,பள்ளி சேர்மன் அசோக், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் முன்னிலையில் பள்ளி வளாகத்தில் 18.47 நிமிடத்தில் ஒரு மடிக்கணினியை கழற்றி மாற்றினாள் ஆதர்ஷினி.
அதைவிட குறைவான நேரத்தில் சிறுமியால் இதனை செய்ய முடியும் என்ற அவளது தன்னம்பிக்கையை பாராட்டி மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுத்தது சாதனை நிறுவனம். இதனை தொடர்ந்து 15.23 நிமிடத்தில் மடிக்கணியை கழற்றி மாட்டி சாதனை படைத்ததன் மூலம் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸில் ஆதர்ஷினி இடம் பிடித்தாள்.
இது குறித்து சிறுமி கூறுகையில், கணினியை அப்பா சர்வீஸ் செய்வதை பார்த்து எனக்குள் ஆர்வம் ஏற்பட்டது. 15 நாட்கள் இடைவிடாது முயற்சி செய்து அதன் நுட்பத்தை தெரிந்து கொண்டு இந்த சாதனையை படைத்துள்ளேன்.
தற்போது செய்த சாதனையை காட்டிலும் மிக குறைவான நேரத்தில் செய்து மற்றொரு சாதனை படைப்பேன் என கூறினார்.

பருக்கள் மறைய சிலஎளிய குறிப்புகள்!

Tuesday, August 20, 2013



Pimple-Popsஅகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது பழமொழி. ஆனால் அந்த முகத்தில் ஏற்படும் பருக்கள் அனைத்து அழகையும் கெடுத்து விடுகிறது. ஆண்கள் மற்றும் பெண்கள் பெரிதும் அவஸ்தைப்படும் சரும பிரச்சினைகளில் ஒன்று தான் இந்த முகப்பரு.
அதிலும் பருவ வயதை எட்டிய இளம் வயதினருக்கு ஏற்படும் இந்த பருக்களானது அவர்களின் தன்னம்பிக்கையையே கேள்விக்குறியாக்கி விடுகிறது. இத்தகைய முகப்பருக்களானது முகத்தின் அழகைக் கெடுக்கும் வண்ணம் வரக்கூடியது.
இந்த முகப்பரு தாடைகளில் வந்தால், மேக்கப் கொண்டு மறைக்க முயற்சிப்போம். இருப்பினும், அந்த முகப்பருக்களானது மேக்கப் பொருட்களில் உள்ள கெமிக்கல்களால் உடைந்து, முகம் முழுவதும் பரவி பெரும் தொல்லையைக் கொடுக்கும்.
அதிலும் இந்த பருக்கள் முகங்களில் மட்டுமின்றி, உடலில் மார்பகம், முதுகு மற்றும் உட்காரும் இடங்களிலும் வரும். முகப்பருக்கள் எதனால் வருகிறது? தூசிகள், பாக்டீரியா மற்றும் இறந்த செல்களின் கலவையானது, சரும எண்ணெய் சுரப்பிகளில் தங்கி புரப்பியோனி பாக்டீரியாவை வளர்ச்சி அடையச் செய்து, பருக்களாக வெளிப்படுகின்றன.
அதுமட்டுமின்றி, வேறு சில சரும பிரச்சினைகளையும் உண்டாக்கி விடுகின்றன. மேலும் பி.சி.ஓ.எஸ்., கர்ப்பம் மற்றும் எண்ணெய்ப் பசை சருமம் கூட முகப்பருக்களை உண்டாக்கும். இத்தகைய பருக்கள் தாடைகளில் வந்தால், அவை முகத்தின் அழகையே பாழாக்கி விடும்.
அதேப் போன்று இவற்றைப் போக்குவதும் மிகவும் கடினம். உடல் சூட்டினால் பருக்கள் ஏற்படுவதாகவும், எண்ணை பயன்பாடு அதிகம் இருப்பதால் பருக்கள் உருவாவதாகவும் பல்வேறு கருத்துக்கள் கூறப்படுகிறது.
சிலருக்கு குறிப்பிட்ட கால இடை வெளியில் இந்த பருக்கள் மறைந்து விடுகிறது. சிலருக்கோ முகத்தின் அழகை சீர்குலைப்பது போல் குழிகள் உண்டாகி அவலட்சணத்தை ஏற்படுத்தி விடுகிறது. இருப் பினும், ஒருசில இயற்கைப் பொருட்கள் மற்றும் செயல்கள் மூலம் தாடைகளில் வரும் பருக்களை போக்க முடியும்.
அதிலும் நம்பிக்கையுடன் மேற்கொண்டால், முடியாதது எதுவும் இல்லை. சரி, இப்போது தாடைகளில் ஏற்படும் பருக்களை போக்கும் சில இயற்கை சிகிச்சைகளைப் பார்ப்போம்.
ஆவிப் பிடித்தல்:  சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்குகளைப் போக்க ஆவிப் பிடிக்க வேண்டும். ஏனெனில் ஆவிப்பிடித்தால், சருமத் துளைகள் திறந்து, சருமத் துளைகளில் தங்கியுள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்களை தளர்ந்துவிடும். இதனால் ஆவிப்பிடித்தப் பின் காட்டன் கொண்டு, முகத்தை துடைத்தால், பருக்களை உண்டாக்கும் மாசுக்கள் மற்றும் இறந்த செல்கள் முற்றிலும் வெளிவந்துவிடும்
கிராம்பு: கிராம்பும் பருக்களை போக்கக்கூடிய பொருட்களில் ஒன்றாகும். அதற்கு கிராம்பை நீரில் போட்டு கொதிக்கவிட்டு, குளிர வைத்து, பின் அதனை அரைத்து, பருக்கள் உள்ள இடங்களில் தடவி, 15-20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும்.
முகத்தை கழுவவும்: அடிக்கடி முகத்தை கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் படியும் அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள், எண்ணெய் சுரப்பிகளில் இருந்து வெளியேறும் எண்ணெய்களில் கலந்து, முகப்பரு மற்றும் பிம்பிளை உருவாக்குவதில் இருந்து தடுக்கலாம்.
சந்தனப் பொடி: சந்தனப் பொடியுடன், தயிர், கடலை மாவை மற்றும் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்திற்கு தடவி ஊற வைத்து கழுவினால், பருக்கள் நீங்குவதோடு, முகமும் பொலிவோடு காணப்படும்.
தேன்: தேனைக் கொண்டு பருக்கள் உள்ள இடங்களில் மசாஜ் செய்து, 15-20 நிமிடம் ஊற வைத்து, பால் கொண்டு முதலில் கழுவி, பின் நீரில் அலசினால், சரும வறட்சியை தவிர்ப்பதோடு, பருக்களையும் போக்கலாம். யாரையும் எளிதில் எதிர் கொண்டு பேசுவதற்கு கூட கூச்சத்தை ஏற்படுத்தும்.
இந்த பருக்களை மேற்கூறப்பட்டுள்ள செலவு குறைந்த மருத்துவ குறிப்புக்களை கையாண்டு பருக்கள் இல்லாத முகத்தை, நாமும் கொண்டு வருவோம்.

பள்ளிவாசல்கள் முஸ்லிம்களை நேர்வழிப்படுத்தவே : கித்துல்பே தேரர்!


பள்ளிவாசல்கள் நிர்மாணிக்கப்படுவது என்பது முஸ்லிம் மக்களை நேர்வழிப்படுத்துவதற்காகும். இதனை அறியாத சிலர் இனவாதங்களைத் தூண்டி நாட்டில் இனப்பிரச்சினையை ஏற்படுத்த முயற்சிகள் செய்கின்றனர் என்று குருநாகல் எபஸ்கிகோ பௌத்த நிலையத்தின் தலைவர் கித்துல்பே ஆரியதம்ம தேரர் தெரிவித்தார்.
குருநாகல் குளத்து வீதியில் வாமி நிறுவனத்தினால் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அல் மஸ்ஜிதுல் ரஹ்மா பள்ளிவாசல் திறப்பு விழா சமீபத்தில் நடைபெற்றது. அந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட கித்துல்பே ஆரியதம்ம தேரர் அங்கு இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந் பேசுகையில் இந்தப் பள்ளிவாசல் திறப்பு விழாவில் கலந்து கொள்ளுவதில் நான் மகிழ்ச்சியடைகின்றேன். இது போன்ற பள்ளிவாசல்கள் இலங்கையில் எல்லா இடங்களிலும் திறக்கப்பட வேண்டும். எந்தவொரு மார்க்கமும் நல்ல அம்சங்களையே போதிக்கின்றன. குறுகிய காலத்திற்கு இந்தப் பள்ளி நிர்மாணிக்கப்பட்டமையிட்டு நான் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன். இந்த பள்ளிவாசல் இந்தப் பகுதியிலுள்ள இளைஞர்களை நேரான வழிக்கு கொண்டு செல்லும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் வாமி நிறுவனத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி உமர் இத்திரீஸ், குருநாகல் மாவட்ட ஸ்ரீ. சு. கட்சியின் அமைப்பாளர் அப்துல் சத்தார் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.

முஸ்லிம் தரப்பும் நவநீதம் பிள்ளையை சந்திக்கிறது!

இலங்கை வரவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் நவநீதம் பிள்ளையை முஸ்லிம் பிரதிநிதிகள் அடங்கிய குழுவொன்றும் சந்திக்கவுள்ளது. இதனை குறித்த குழுவில் இடம்பெற்றுள்ள அந்த குழுவின் தலைவர் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் தெரிவித்தார்.
பயங்கரவாத புலிகளும், பௌத்தசிங்கள இனவாதிகளும் இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொண்ட மனித உரிமை மீறில்கள் குறித்து இலங்கை முஸ்லிம்களின் சார்பில் நவநீதம் பிள்ளைக்கு ஆதாரங்களுடன் எடுத்துக்கூறப்படவுள்ளன.
பயங்கரவாத புலிகள் முஸ்லிம்களுக்கு இழைத்த போர்க் குற்றங்கள், வடக்கிலிருந்து முஸ்லிம்களை பயங்கரவாத புலிகள் இனச்சுத்திகரிப்பு செய்தமை, கிழக்கு மாகாணத்தில் தொழுது கொண்டிருந்த முஸ்லலிம்களை சுட்டுக்கொன்றமை உள்ளிட்ட புலிகள் செய்த கொடுரங்கள் நவநீதம் பிள்ளையுடனான சந்திப்பின்போது ஆதாரங்களுடன் முன்வைக்கப்படவுள்ளன.
அத்துடன் அண்மைக்காலமாக பௌத்தசிங்கள இனவாத கடும்போக்கு அமைப்புக்கள் பள்ளிவாசல்கள் மீது மேற்கொண்ட தாக்குதல்கள், முஸ்லிம்களின் மதச் சுதந்திரத்திற்கு விடப்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் குறித்தும் நவநீதம் பிள்ளையுடனான சந்திப்பின் போது எடுத்துக்கூறப்படவிருப்பதாகவும் அந்த முஸ்லிம் பிரமுகர் மேலும் கூறினார்.
 

Follow On Facebook

F (Space) Msg1st Sent To 40404

Midiyala Background

Most Reading

Tags

Midiyala Hot News Presentetion. Powered by Blogger.