
பள்ளிவாசல்கள் நிர்மாணிக்கப்படுவது என்பது முஸ்லிம் மக்களை நேர்வழிப்படுத்துவதற்காகும். இதனை அறியாத சிலர் இனவாதங்களைத் தூண்டி நாட்டில் இனப்பிரச்சினையை ஏற்படுத்த முயற்சிகள் செய்கின்றனர் என்று குருநாகல் எபஸ்கிகோ பௌத்த நிலையத்தின் தலைவர் கித்துல்பே ஆரியதம்ம தேரர் தெரிவித்தார்.
குருநாகல் குளத்து வீதியில் வாமி நிறுவனத்தினால் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அல் மஸ்ஜிதுல் ரஹ்மா பள்ளிவாசல் திறப்பு விழா சமீபத்தில் நடைபெற்றது. அந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட கித்துல்பே ஆரியதம்ம தேரர் அங்கு இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந் பேசுகையில் இந்தப் பள்ளிவாசல் திறப்பு விழாவில் கலந்து கொள்ளுவதில் நான் மகிழ்ச்சியடைகின்றேன். இது போன்ற பள்ளிவாசல்கள் இலங்கையில் எல்லா இடங்களிலும் திறக்கப்பட வேண்டும். எந்தவொரு மார்க்கமும் நல்ல அம்சங்களையே போதிக்கின்றன. குறுகிய காலத்திற்கு இந்தப் பள்ளி நிர்மாணிக்கப்பட்டமையிட்டு நான் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன். இந்த பள்ளிவாசல் இந்தப் பகுதியிலுள்ள இளைஞர்களை நேரான வழிக்கு கொண்டு செல்லும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் வாமி நிறுவனத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி உமர் இத்திரீஸ், குருநாகல் மாவட்ட ஸ்ரீ. சு. கட்சியின் அமைப்பாளர் அப்துல் சத்தார் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.
No comments:
Post a Comment