ஸ்மார்ட் கைப்பேசி, டேப்லட் உற்பத்திக்கு அடுத்தபடியாக ஸ்மார்ட் கைக்கடிகார உற்பத்தியில் கால் பதித்துள்ள Samsung நிறுவனம் Galaxy Gear எனும் ஸ்மார்ட் கைக்கடிகாரத்தினை வடிவமைத்து வருகின்றது. இந்நிலையில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 4ம் திகதி அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படும் இக்கைக் கடிகாரம் தொடர்பான சில தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. இதன்படி 1.5GHz வேகத்தில் செயலாற்றக்கூடிய Processor, 1GB RAM ஆகியவற்றினைக் கொண்டுள்ளது. இவை தவிர 1.67 அங்குல அளவு, 320 x 320 Pixel Resolution உடைய தொடுதிரை, 2 மெகாபிக்சல்கள் உடைய கமெரா போன்றவற்றினையும் உள்ளடக்கியுள்ளது. எனினும் இதன் விலை தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
உலகை கலக்க வருகிறது ஸ்மார்ட் கைக்கடிகாரம் !
Tuesday, August 20, 2013
SAMSUNG மொபைல் போன்களுக்கான குறியீட்டுகளே....
Friday, August 16, 2013
1)*#9999# - தங்கள் போனின் சாப்ட்வேர் சார்ந்த தகவல்களை அறிய.
2)#*3849# -தங்கள் சாம்சங் மொபைல் போனை மீண்டும்Rebootசெய்ய.
3)*#06# -சாம்சங் போனின்IMEI (EMI)எண்ணை அறிய. இது மிக முக்கிய ஓர் எண்ணாகும்.
4)#*2558# -தங்கள் போனின் கடிகாரத்தை இயக்க அல்லது நிறுத்த. தங்கள் போனின் மொபைல் போனின் டைமை ஆன் செய்ய அல்லது ஆப் செய்ய.
5)#*7337# -தங்கள் அண்மைகால சாம்சங் மொபைல் போனை அன்லாக் செய்ய(UnLock).
6)#*4760# -தங்களில் போனில்GSM Featuresயை இயக்க அல்லது நிறுத்த.
7)*#9998*246# -தங்கள் போனின் மெமரி திறன் மற்றும் பேட்டரியின் திறனை அறிய.
8)*#7465625# -தங்கள் போனின் கடவுசொல் நிலைமை அறிய.
9)*#0001# -தங்கள் போனின் சீரியல் எண்ணை காண.
10)*#2767*637# -தங்கள் மொபைல் போனை அன்லாக் செய்ய.
11)*#8999*636# -தங்கள் போனின் சேமிப்பு கொள்ளலவு நிலைமையை காண.
12)*#8999*778# -தங்கள் சிம் கார்ட் பற்றிய தகவல்களை அறிய.
13)#*#8377466# -தங்கள்போனின் ஹாட்வேரின் தன்மை மற்றும்Versionயை அறிய.
14)#*3888# -சாம்சங் போன்களின்Bluetoothயின்தகவல்களை
15)#*5376# - ஒரே கட்டளையில் தங்கள் போனின் அனைத்து மெசேஜ்யும் ஒரே கட்டளையில் நீக்க அல்லது அழிக்க.
16)#*2472# -தங்கள் போனின் சார்ஜிங் நிலைமை அறிய.
ஒரு சில கோடுகள் சில போன்களில் இயங்காது.
Midiyala Pazaiku Carpet Ida Pazayai Alapazatku Abdul Saththar
Thursday, August 15, 2013
Msg1st 2nd Year Anniversary To Day...
Monday, August 12, 2013
Grandpass Molawattha Palli Thakkuthalil Nadanththu Enna?
Saturday, August 10, 2013
Grandpass Molawattha Palli Thakkuthalil Nadanththu Enna? Mulu Viparngkal Adangkiya Video Vai Parkka >>>
http://www.dailymotion.com/video/x12xkra_%E0%AE%AE-%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%B3-%E0%AE%B3-%E0%AE%A4-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%B2-sltj_news
http://www.dailymotion.com/video/x12xkra_%E0%AE%AE-%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%B3-%E0%AE%B3-%E0%AE%A4-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%B2-sltj_news
மடிகே மிடியால அல் ஹைராத் இனால் வழங்கப்பட்ட இப்தார் நிகழ்வு
Wednesday, July 31, 2013
Al-Hairath Nalanpuri Sanga IFTHARin Viseda Bayan,
Ash-Shekh Al-Haj M.I. Suhaib(Deeni)Avarkal.
Photos Taken By Atm Fazly
Admin
Tm Ijlan
மஹியங்கனை பள்ளிவாசல் தொடர்பில் நடைபெற்ற நாடகம்!
Sunday, July 28, 2013
மஹியங்கனை பள்ளிவாசல் பல வருடங்களுக்கும் மேலாக இயங்கிவரும் ஒரு பள்ளிவாசல் என்பது சகலரும் அறிந்த விடயம். மர்ஹும் அஷ்ரப் உள்ளிட்ட பலர் அங்கும் தொழுதும் உள்ளார்கள். பள்ளிவாசல் சட்டரீதியாக பதிவு செய்யப்பட்டதா இல்லையா என்ற வாதங்களைவிட அங்கு பள்ளிவாசல் இருந்துள்ளது. ஜும்ஆ உள்ளிட்ட இறை வணக்க வழிபாடுகளும் நடைபெற்றுள்ளன என்பதே பிரதானமானது.
அப்பள்ளிவாசல் ஸ்த்தாபகரும், பள்ளிவாசல் தலைவருமான சீனி முஹம்மது ஜப்னா முஸ்லிம் இணையத்துடன் இறுதியாக தொலைபேசியில் கதைக்கும்போது கூட அப்பள்ளிவாசல் குறித்து கண்ணீர் மல்கியிருந்தார்.அப்படிப்படட்டவரா மஹியங்கனையில் பள்ளிவாசலே இருக்கவில்லையென கடிதம் எழுதினார் என ஒட்டமொத்த முஸ்லிம் சமூகத்திற்கும் கேள்விகள் எழுவதில் நியாயமுள்ளது.
பௌத்த சாசன அமைச்சிற்கு அவர் எழுதிய கடிதமும் தினகரன் வாரமஞ்சரி பத்திரிகையில் 28-07-2013 வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இந்தக் கடிதம் தொடர்பில் எமக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களை இங்கு அப்படியே தருகிறோம்.
தினகரன் வாரமஞ்சரியில் பள்ளிவாசல் பற்றிய, அப்பள்ளிவாசல் தலைவரின் கடிதம் ஞாயிற்றுக்கிழமை வெளியாக முன்னரே, ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு இலங்கை நேரப்படி சனிக்கிழமை, 27-07-2013 அன்று மாலை 6 மணியளவிலேயே இவ்வாறான ஒரு கடிதம் தினகரன் வாரமஞ்சரியில் வெளியாகவுள்ளதாக தகவல் கிடைத்தது.
அதேவேளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பிரதான தமிழ் மொழிபெயர்ப்பாளர் ராகுல்லன்தான் சிங்களத்தில் காணப்பட்ட இந்த கடிதத்தை தமிழில் மொழிபெயர்த்தவர் ஆவார். இந்த விவகாரத்துடன் முஸ்லிம் பிரதியமைச்சர் ஒருவர் நேரடி சம்பந்தப்பட்டுள்ளார்.
இவ்வாறான ஒரு கடிதம் வெளியிடப்பட்டதன் பின்னர் தம்மை சந்திக்கவுள்ள ஆளும்கட்சி முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் மஹியங்கனையில் பள்ளிவாசல் இருக்கவில்லை என அந்தக் கடிதத்தையும், பத்திரிகைச் செய்தியையையும் காண்பிப்பதே இங்கு நோக்கமாக இருந்துள்ளது. அதற்கேற்பவே தற்போதுவரை நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மஹியங்கனையில் பள்ளிவாசலே இருக்கவில்லை என்ற பிரச்சாரம் தற்போது முன்னெடுக்கப்படுகிறது. வேடுவர் தலைவர் உள்ளிட்ட பௌத்த குருக்களும் இந்தப் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த பிரச்சாரத்திற்கு வலுசேர்ப்பதாகவே சீனி முஹம்மது பெயரில் வெளியாகியுள்ள கடிதமும் அமையப்போகிறது.
அதேநேரம் பள்ளிவாசல் தலைவரின் இந்த செய்தி வெளியானதிலிருந்து அவருடன் தொடர்புகொள்ள ஜப்னா முஸ்லிம் இணையம் 15 க்கும் மேற்பட்ட தடவைகள் முயன்றது. அவரின் கையடக்க தொலைபேசியில் ரிங் ஒலிக்கிறதே தவிர, மறுபக்கத்தில் எந்த பதிலும் இதுவரை வழங்கப்படவில்லை.
மஹியங்கனை பள்ளிவாசல் பதிவுசெய்யப்படாமல் இருந்திருக்கலாம். அதற்காக அது பள்ளிவாசலாக பயன்படுத்தப்படவில்லை என்பது சுத்தப்பொய். அந்த அல்லாஹ்வின் இல்லத்தின் சுஜுது செய்த பலர் இதற்கு ஆதாரமாக உள்ளனர். பெரும்பான்மை சமூகத்தை திருப்திப்படுத்துவதற்காக மஹியங்கனையில் பள்ளிவாசலே இல்லையென கூறவருவது முற்றிலும் கணடிக்கத்தக்கது எனலாம்.!
இங்கு மேல்மாகாண சபை உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் எங்களிடம் ஒருமுறை கூறியதை ஞாபகப்படுத்த விரும்புகிறோம். நாட்டில் பதிவு செய்யப்படாத பள்ளிவாசல்களைவிட, பதிவு செய்யப்படாத பௌத்த விகாரைகளே அதிகம் என்பதாகும்..!
MidiyalaHot Admin...
-jaffnamuslim
முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட மாட்டாது – பொதுபல சேனா!
Friday, July 26, 2013
முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட மாட்டாது – பொதுபல சேனா!
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சமய விவகார ஆலோசகர் அப்துல் காதர் மசூர் மௌலானாவிடம், பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார். பொதுபலசேனா தலைமையகத்தில் இரு தரப்பினருக்கும் இடையில் சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது.
முஸ்லிம் எதிர் நடவடிக்கைகளுடன் தமக்கு தொடர்பில்லை என பொதுபல சேனா அறிவித்துள்ளது. சில குறுகிய நோக்கங்களைக் கொண்ட தரப்பினர் தமது பெயரைப் பயன்படுத்தி இவ்வாறான தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாகத் கலபொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். முஸ்லி;ம் மக்களின் தனித்துவ அடையாளங்களை பாதுகாக்கும் முயற்சிகளுக்கு பொதுபல சேனா எதிர்ப்பை வெளியிடவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு, வடமேல், மத்திய மாகாண சபை தேர்தலும், பூரண வ...
Tuesday, July 16, 2013
வடக்கு, வடமேல், மத்திய மாகாண சபை தேர்தலும், பூரண வ...: (ஏ.எல்.ஜுனைதீன்) நடைபெறவிருக்கும் வடக்கு, வட மேல் மற்றும் மத்திய மாகாண சபைகளுக்கு 142 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கு 43 இலட்ச...
Subscribe to:
Posts (Atom)