முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட மாட்டாது – பொதுபல சேனா!
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சமய விவகார ஆலோசகர் அப்துல் காதர் மசூர் மௌலானாவிடம், பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார். பொதுபலசேனா தலைமையகத்தில் இரு தரப்பினருக்கும் இடையில் சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது.
முஸ்லிம் எதிர் நடவடிக்கைகளுடன் தமக்கு தொடர்பில்லை என பொதுபல சேனா அறிவித்துள்ளது. சில குறுகிய நோக்கங்களைக் கொண்ட தரப்பினர் தமது பெயரைப் பயன்படுத்தி இவ்வாறான தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாகத் கலபொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். முஸ்லி;ம் மக்களின் தனித்துவ அடையாளங்களை பாதுகாக்கும் முயற்சிகளுக்கு பொதுபல சேனா எதிர்ப்பை வெளியிடவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment