Midiyala Hot News

Blogger news

வடக்கு, வடமேல், மத்திய மாகாண சபை தேர்தலும், பூரண வ...

Tuesday, July 16, 2013

 வடக்கு, வடமேல், மத்திய மாகாண சபை தேர்தலும், பூரண வ...: (ஏ.எல்.ஜுனைதீன்)     நடைபெறவிருக்கும் வடக்கு, வட மேல் மற்றும் மத்திய மாகாண சபைகளுக்கு 142 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கு 43 இலட்ச...

Tuesday, July 9, 2013

පුරුදු යතුරුපැදියෙන් ම හිටපු ඉරාන ජනපති ගෙදර යයි


Irudina-Page14

ரமழான் தலைபிறை தென்பட்டது: இன்றிரவு ரமழான் ஆரம்பம்


இணக்கம்...!


கொழும்பு, கிராண்ட்பாஸ், ஷைத்திய வீதியிலுள்ள பள்ளிவாசலை மூடுமாறு கோரி இராவண சக்தி அமைப்பினர் இன்று செவ்வாய்க்கிழமை புத்தசாசன மற்றும் சமய விவகார அமைச்சிற்கு முன்னாள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது குறித்த பள்ளிவாசல் சட்டவிரோத கட்டிடம் என இராவண சக்தி அமைப்பினர் குற்றஞ்சாட்டினர். எவ்வாறாயினும் இந்த ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து இராவண சக்தி அமைப்பினர் மற்றும் ஷைத்திய வீதியிலுள்ள பள்ளிவாசல் பிரதிநிகள் ஆகியோருக்கு இடையில் இணக்கம் காணப்பட்டுள்ளது.

புத்தசாசன மற்றும் சமய விவகார அமைச்சில் இடம்பெற்ற சந்திப்பின்போதே இந்த இணக்கம் காணப்பட்டுள்ளது. இதன்போது குறித்த பள்ளிவாசலை ஒரு மாத காலத்திற்குள் இடமாற்றுவது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. (படங்கள்: கித்சிறி டி மெல்)


Monday, July 8, 2013

விஞ்ஞானிகளை வியக்க வைத்த திரு குர்ஆன்.

விஞ்ஞானிகல் உறுதிபடுத்தி யுள்ளனர்...
திரு குர்ஆன்
முஹம்மது (ஸல்) அவர்களின் சொந்த வார்த்தைகள் அல்ல, மாறாக உணமையான இறைவன் வார்த்தைகள் தான் என்று.

20 ஆம் நூற்றாண்டில் கூட கண்டு புடிக்க முடியாத பல
விஞ்ஞான தகவல்கலை 1435 ஆண்டிற்கு முன்பே அகில உலகத்தையும் படைத்த இறைவன் அதனுடைய வடிவத்தை
மிக தெளிவாக கூறிவிட்டான் எந்த வேதங்களிலும் இது வரை சொல்லபடாத பல உணமைகளை திருமறை குர் ஆனில் மட்டுமே.. புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே..

இந்த நூற்றாண்டில், கருவறையில் உள்ள பல நிலைகளை SCAN செய்து சொல்லப்படுவதை எந்த ஒரு கருவியும், இன்னும் electric கூட இல்லாத அந்த இருண்ட காலத்தில் மிக துல்லியமாக குறிப்பிட்ட குர்ஆன்.

படைப்புக்குளை பற்றி ......

ஒவ்வொரு பெண்ணும் (கர்ப்பத்தில்) சமந்து கொண்டிருப்பதையும், கர்ப்பப்பைகள் சரங்கி குறைவதையும், அவை விரிந்து அதிகரிப்பதையும் அல்லாஹ் நன்கறிவான்; ஒவ்வொரு பொருளுக்கும் அவனிடம் அளவு இருக்கின்றது (13:8)

பின்னர் அந்த இந்திரியத் துளியை அலக் என்ற நிலையில் ஆக்கினோம்; பின்னர் அந்த அலக்கை ஒரு தசைப் பிண்டமாக்கினோம்; பின்னர் அத்தசைப்பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம்; பின்னர், அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவித்தோம்; பின்னர் நாம் அதனை வேறு
ஒரு படைப்பாக (மனிதனாகச்) செய்தோம். (இவ்வாறு படைத்தவனான) அல்லாஹ் பெரும் பாக்கியமுடையவன் (படைப்பாளர்களில் எல்லாம்) மிக அழகான படைப்பாளன்.
பிறகு, நிச்சயமாக நீங்கள் மரணிப்பவர்களாக இருக்கிறீர்கள். பிறகு, கியாம நாளன்று, நிச்சயமாக நீங்கள் எழுப்பப்படுவீர்கள் (23: 14, 15, 16.)

மலைகளை பற்றி திரு குர் ஆன்

பல அடுக்குகள் கொண்ட இந்த பூமி ஒரு மணிக்கு 5500 Km வேகத்தில் சுழன்று கொண்டும் 100900 km வேகத்தில் நகர்ந்து கொண்டும் சூரியனை சுற்றி வருகிறது.
இவ்வாறான வேகத்தில் ஓடும் பூமி குலுங்காமல் இருபதற்கு காரணம் மலைகள் ஆணி போன்று நிறுவப்பட்டுள்ளது. இதை சமீபமாக கண்டு புடிதத்தை திரு மறை யில் அன்றே இறைவன் கூறிவிட்டான்.

அதில், மலைகளையும் அவனே நிலை நாட்டினான். (32)

உங்களுடன் பூமி அசையாதிருப்பதற்காக அவன் அதன் மேல் உறுதியான மலைகளை நிறுத்தினான்; இன்னும் நீங்கள்
சரியான வழியை அறி(ந்து செல்)வதற்காக அவன்
ஆறுகளையும் பாதைகளையும் (அமைத்தான்).(15)

இது போன்று இன்னும் பல உண்மைகளை கண்டறிந்த மக்கள் இன்று அலை அலையாய் இஸ்லாத்தை நோக்கி
தலுவிகிறார்கள் இறைவனுடைய நாட்டத்தால்.

இன்று இதை படித்து கொண்டிருக்கும் முஸ்லிம் அல்லாத நண்பர்களே சற்று சிந்தியுங்கள் இது போன்ற சத்தியத்தை எடுத்து சொல்லி நேர் வழியில் அழகிய முறையில் அழைக்கும் எங்களை ஏன் பலர் நாங்கள் தீவிரவாதி தீவிரவாதி என்று
சித்தரிகிறார்கள் ????

காரணம் நாங்கள் சத்தியத்தை கொண்டு அசத்தியத்தில் வீசுகிறோம் இறைவன் ஒருவன் தான் என்று. இன்னும் நன்மைகளை ஏவுகிறோம் தீமைகளை தடுக்கிறோம் ஆனால் இதை பிடிக்காத சில எதிரிகள் மீடியாக்களின் வழியாக எங்களை தடுக்க தீவிரவாதி என்று உங்கள் முன் விளம்பரம் செய்கிறார்கள்.

எனவே நீங்கள் திரு குரானை திறந்த மனதுடன் படிங்கள் பிறகு நீங்கள் உண்மையை அறிந்து கொள்வீர்கள்,

எங்களுடைய நோக்கம் நீங்கள் புனர் ஜென்மத்தில்
(மறுமை வாழ்கையில்) வெற்றி பெற்று சொர்க்கம்
செல்ல வேண்டும் என்பதே.
கீழே உள்ள website bookmark செய்து படித்து வாருங்கள்.
http://tamilqran.in/

நாங்கள் தினமும் உங்களுக்காக பிராத்தனை செய்து வருகிறோம். இறைவன் நாடினால் நீங்கள் முழுவதுமாக நேர்வழி பெறுவீர்கள்.. அந்த மிக பெரிய பாக்கியத்தை உங்களுக்கு அவன் விரைவில் வழங்குவானாக ஆமின்

ஜம்மியத்துல் உலமா சபை தலைவராக மீண்டும் றிஸ்வி முப்தி – ஜனாதிபதி வாழ்த்து!

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷைஹ் ரிஸ்வி முப்த்தி அவர்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் தலைவராக 4 வது முறையாகவும் எதிர்வரும் 3 வருடங்களுக்காக அவர் தெரிவு செய்யப்பட்டமைக்காகவே ஜனாதிபதி இவ் வாழ்த்தினைத் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
நேற்று இரவு பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா அவர்களது இல்லத்தில் நடைபெற்ற இராப்போசன விருந்தில் கலந்துகொண்ட ஜனாதிபதி, இது விடயம் பேசப் பட்டதும் உடனே தொலைபேசி மூலம் ரிஸ்வி முப்த்தியை தொடர்பு கொண்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதுடன் வாழ்த்தினையும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை ஜம்மியத்துல் உலமா சபையின் நிர்வாக குழுவில் கடந்தமுறை பணியாற்றிய பலரே தொடர்ந்தும் புதிய நிர்வாக குழுவிலும் பணியாற்றவுள்ளதாக ஜம்மியத்துல் உலமா சபையின் செயலாளர் மௌலவி முபாரக் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் கூறினார்.

Friday, June 7, 2013

ஜித்தாவில் செயல்பட்டுவரும்இந்த மொபைல் பள்ளிவாசல், வார விடுமுறை நாட்களில் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளுக்கு நம்மைத் தேடி வருகிறது.

படத்தில் காணும் இந்த மொபைல் பள்ளிவாசல், ஜித்தாவில் உள்ள’கார்னிச் பீச்’ என்று அழைக்கப் படும், மக்கள் அதிகம் கூடும் கடல் கரைப் பகுதியில் கடந்த வாரம் வெள்ளிக் கிழமை அன்று எடுக்கப் பட்டதாகும்.

இந்தப் பள்ளி வாசலின் முக்கிய நோக்கம். அசர், மஃரிப், இஷா தொழுகைகளை சிலர் இதுபோன்ற பொழுது போக்கு பகுதிகளுக்கு செல்லும் போது வஃக்துக்கு தொழ இயலாமல் தொழுகையை இழக்க நேரிடும் அவ்வாறான சூழல்களில் இந்தப் பள்ளிவாசல் வஃக்துக்கு தொழுகையை நிறைவேற்ற உதவி புரிகின்றது.

RELEASED: G.C.E.A/L 2013 Exam Timetable

Friday, May 31, 2013

RELEASED: August 5 il Nadaipera Ulla G.C.E.A/L 2013 Pareetchaikana TimeTable Veliyaki Ullathu.

Download Seayya: http://www.doenets.lk/exam/docs/al2013/NEW-Syllabus-2013.pdf

Sunday, May 19, 2013


இலங்கையின் 2ஆவது அதிவேக நெடுஞ்சாலை...

கொழும்பு – கட்டுநாயக்காவுக்கு இடையிலான அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகள் 80 சதவீதமளவில் பூர்த்தியடைந்துள்ள நிலையில், இவ்வருடம் ஓகஸ்ட் மாதத்தில் இந்த நெடுஞ்சாலை பொதுமக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்படவுள்ளது. இந்த அதிவேக நெடுஞ்சாலை தொடர்பான தகவல்கள் பின்வரும் வரைகலையில் விபரிக்கப்பட்டுள்ளன.
 

Follow On Facebook

F (Space) Msg1st Sent To 40404

Midiyala Background

Most Reading

Tags

Midiyala Hot News Presentetion. Powered by Blogger.